Roja: "பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது" - ரோஜா பேட்டி
"படப்பிடிப்பில் தகாத வார்த்தையை உபயோகிக்கும் தெலுங்கு இயக்குநர்" - நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு
சமீபத்தில் ‘OTHERS’ என்ற தமிழ் பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் ஹிரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது பெரும் சர்ச்சைக் கிளப்பியிருந்தது.
இதுகுறித்து கோபத்துடன் பேசிய கெளரி, "என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.
இதையடுத்து நடிகை கெளரி கிஷனுக்கு தமிழ், மலையாளம் திரையுலகில் இருந்து ஆதரவுகள் குவிந்தன. பலரும் அந்த பத்திரிகையாளரைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இப்போது ஜி.வி.பிரகாஷ் உடன் 'பேச்சுலர்' படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கு பட இயக்குநர் ஒருவர் படப்பிடிப்பில் தகாத வார்த்தையை இயல்பாக உபயோகிப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
குறிப்பாக நரேஷ் குப்பிலி என்ற தெலுங்கு இயக்குநரின் எக்ஸ் வலைதள பதிவைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் திவ்யபாரதி, "பெண்களை 'Chilaka' (தெலுங்கில் கிளி எனப் பொருள்படுகிறது) சொல்வது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, அது 'misogyny' மனநிலை கொண்டவர்களின் வக்கிரமான மனநிலையின் வெளிபாடு. பெண்ணை புகழ்வதுபோல அவர்களது வெளித்தோற்றத்தை வக்கிரமாக வர்ணிக்கும் சொல் அது. இது ஓர் உதாரணம்தான்.
இதுபோல பல தகாத வார்த்தைகளை, தகாத எண்ணத்துடன் படப்பிடிப்புத் தளங்களில் பெண்கள் மீதும் நடிகைகள் மீது சில இயக்குநர்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்களை அவமதிக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் படப்பிடிப்பில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த இயக்குநர்.
Calling women “Chilaka” or any other term isn’t a harmless joke, it’s a reflection of deep-rooted misogyny. And this wasn’t a one-off incident; this director followed the same pattern on set too, repeatedly disrespecting women and honestly, betraying the very art he claims to… pic.twitter.com/7mNGpcxeG0
— Divyabharathi (@divyabarti2801) November 19, 2025
படப்பிடிப்புத் தளங்களில் இயக்குநர்கள் இதுபோன்ற தகாத சொற்களைப் பயன்படுத்தும்போது அங்கிருக்கும் ஹீரோ உள்ளிட்ட பலரும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இது என்னமாதிரியான மனநிலை என்று தெரியவில்லை.
இங்கு எல்லோருக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. நான் ஒவ்வொரு முறையும் இதுபோன்றவர்கள் இல்லாத படக்குழுவையே தேர்வு செய்து நடிக்க நினைப்பேன். அதுதான் இப்போதைக்கு என்னால் முடிந்தது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்கள் ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் என்னை வருத்தமடையச் செய்கின்றன" என்று கூறியிருக்கிறார்.


















