செய்திகள் :

பழனி கோயில் நில மோசடி: ``அடுக்கடுக்கான கேள்வி; பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன" - CPM கே.பாலகிருஷ்ணன்

post image

பழனி ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``பழனியில் முருகன் கோயிக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் சென்றதும், கொடைக்கானலில் இருந்து வந்த அதிகாரி அன்றே பணியில் இணைந்து இந்தப் பதிவை மேற்கொண்டதும், ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பத்திரப்பதிவை ரத்து செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது நல்ல நடவடிக்கை என்றாலும், அமைச்சர், 'இது அறியாமல் நடந்த தவறு' என்று கூறுவது பொதுமக்களிடையே சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருப்பதும், கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் யாரும் கைது செய்யப்படாததும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இம்முறைகேட்டில் முழுமையான விசாரணை நடத்தி, நிலத்தை மீட்க நீதிமன்றத்தை நாடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது.

மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்திலும், அரசு நிகழ்ச்சிகளிலும் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சிக்கு வந்த அனைவரும் ஊழலை ஒழிப்பதாகக் கூறினாலும், தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் இன்னும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. வார்த்தைகளில் மட்டுமில்லாமல், ஊழலை முற்றாக ஒழிப்பதில் அரசு உறுதியோடு செயல்பட வேண்டும்.

பத்திரிகையாளர் விஜயன் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை அராஜகத்தின் உச்சம். அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்றார்.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க