செய்திகள் :

"பிகினி உடை அணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை; காரணம்..." - காஜல் அகர்வால் 'பளீச்'

post image

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் வெளியாக இருக்கிறது.

தவிர நிதிஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிகினி ஆடை அணிவது குறித்து காஜல் அகர்வால் பேசியிருக்கிறார்.

 ‘தி இந்தியா ஸ்டோரி’
‘தி இந்தியா ஸ்டோரி’

இதுதொடர்பாக பேசிய அவர், "நான் எந்தவொரு திரைப்படத்திலும் இதுவரை பிகினி காட்சிகளில் நடித்ததில்லை. எனக்கு பிகினி உடை அணிந்து நடிப்பதில் உடன்பாடு இல்லை.

அது முற்றிலும் எனது தனிப்பட்ட விஷயம் என்று நம்புகிறேன். அதுபோன்ற தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியளவும் விருப்பம் இல்லை.

தேவையில்லாத காட்சிகள் இருக்கும் பல திரைப்படங்களை நான் நிராகரித்தும் இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எனக்கு கவலை இல்லை.

தனது மகனுடன் காஜல் அகர்வால்
தனது மகனுடன் காஜல் அகர்வால்

எனக்கென்று சில தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. ஒரு தாயான பிறகு, என் குழந்தை எனது திரைப்படங்களைப் பார்க்கும்போது அசௌகரியமாக உணர்வதை நான் விரும்பவில்லை.

என் மகன் என் திரைப்படங்களைப் பெருமையோடு பார்க்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

72-வது தேசிய விருதுகள்: சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்ற தனுஷின் 'ராயன்'

இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் வழக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளி... மேலும் பார்க்க

அருள்வான் விமர்சனம்: மலைவாழ் சிறுமியின் கல்விக்கான போராட்டம்; அருள்நிதியின் டிராமா இலக்கை அடைகிறதா?

தேனி மலைக்கிராமத்தில் பெற்றோருடன் வளர்கிறார் காடர் இனச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அப்பா கந்தன் (ஆரவ்) மலையில் தேன் எடுப்பது, அம்மா அமரவள்ளி (ரம்யா பாண்டியன்) காட்டில் சுள்ளி விறகு சேகரிப்பது ... மேலும் பார்க்க

Brigida Saga: "அவரது ப்ரொபோசல் எளிமையாக அவரைப் போலவே இருந்தது!" - காதல் குறித்து பிரிகிடா பேட்டி

கோலிவுட்டில் புதிய ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது. நடிகை பிரிகிடா சகாவும், இயக்குநர் அனந்தும் காதலிப்பதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பிரிகிடாவின் ரசிகர்களுக்க... மேலும் பார்க்க

இதயம் முரளி: "தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம்தான்!" - கயாடு லோஹர்

'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான படம் 'இதயம் முரளி'. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தத் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலை... மேலும் பார்க்க

அன்பே டயானா விமர்சனம்: சாதியத்தை உடைக்கும் அன்பான அடாவடி காதல்; காமெடி கைகொடுக்கிறதா?

பெரம்பூரில் வசித்து வரும் சிருமாமில்லா சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்) குழந்தைகளுக்கான தடகளப் பயிற்சியாளராக இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் (ரம்யா ரங்கநாதன்) மீது கி... மேலும் பார்க்க

கருணாஸ் தயாரிப்பில் கென் கருணாஸ்; வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கென்! | Exclusive Update

'யூத்' படத்தின் மூலம் இயக்குநராக, ஹீரோவாக கவனம் ஈர்த்தவர் கென் கருணாஸ். அந்தப் படத்தை அடுத்து சத்தமில்லாமல் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ராஜன் வகையறா'வில் நடித்து வருகிறார். காதலும், ஃபேமிலி சென்டிமென்ட... மேலும் பார்க்க