செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ‘பார்’ நாகராஜ் தவெக-வில் இணைந்தாரா?

post image

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டில் இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் கடந்த 2025-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதாரை தாக்கிய அடிதடி வழக்கில், பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பரான கோட்டூர் பகுதியில் பார் நடத்தி வந்த அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், பார் நாகராஜ் த.வெ.க-வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த கூட்டத்தோடு கூட்டமாக பார் நாகராஜூம் வந்து சென்றிருக்கிறார். அவருடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை த.வெ.க-வில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.

இது குறித்து பார் நாகராஜிடம் கேட்டபோது, “த.வெ.க-வில் நான் இணையவில்லை. பொள்ளாச்சியில் இருந்து நண்பர்கள் சென்றதால், கூட போனேன். அதைவைத்து த.வெ.க-வில் இணைந்ததாக வதந்தியை கிளப்பி விட்டார்கள். செங்கோட்டையனை நான் பார்த்தபோது, அங்கு குறைந்தது ஐநூறு பேர் இருந்திருப்பார்கள். அதில் நான் யாரென்று அவருக்கு தெரியாது. அடிதடி வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாலியல் வழக்கில் எனக்கு தொடர்பில்லை என சிபிஐ-யே விடுவித்துவிட்டது. ஆனாலும் சிலர் வேண்டுமென்றே பெரிது பண்ணுகிறார்கள்” என்றார்.

சீனா உதவியுடன் விண்வெளி மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்! - இந்தியாவை உளவு பார்க்கிறதா?

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மற்றும் பெகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam attack) சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பே, பாகிஸ்தான் தனது உளவு செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தத் தொடங்கிவிட்டத... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு வேலை வாங்கி தருவதாக அன்பில் மகேஸ் பெயரில் மோசடி! - அலட்சியத்தால் பறிபோன உயிர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன், தி.மு.க கிளைச் செயலாளர். இவர் கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கிய உறவின... மேலும் பார்க்க

"காங்கிரஸ் நிர்வாகிகளை தவெக-வில் இணைப்பதை ஏற்க முடியாது" – முதல்வர் விஜய் மீது காங்கிரஸ் அதிருப்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில தினங்களாக த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் அக்கட்சியில் இணைந்... மேலும் பார்க்க

ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? - காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனு அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஈரான்; 'தற்காப்புத் தாக்குதல்' நடத்திய அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. நேற்று ஈரான், அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதற்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது அமெரிக்க ராணுவம்... மேலும் பார்க்க