பெட்ரோல் விலையேற்றம்: `விலைவாசி உயர்வு முதல் ஹைப்ரிட் வாகனம் வரை'- சிக்கல்களை வி...
'மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்!' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.
இந்நிலையில் அரசின் தவறான நிர்வாகத்தால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசின் தவறே காரணம். மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது.
அரசின் தவறான நிர்வாகத்தால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றனர்" என்று சாடியிருக்கிறார்.












