செய்திகள் :

`எடப்பாடிதான் எங்கள் தலைவர்; மாற்றுக் கருத்து இல்லை’ - வேலுமணி அணியில் இருந்து தாவிய கே.சி.வீரமணி

post image

அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்து வந்தார். இதனால், கே.சி.வீரமணியிடம் இருந்த திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து அந்தப் பதவியில் டாக்டர் பசுபதியை நியமித்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டவர்தான் இந்த பசுபதி. இதையடுத்து, வீரமணி தரப்பு பிரச்னை செய்யக்கூடும் எனத் தகவல் பரவியதால் அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்துக்கும், பசுபதி வீட்டுக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.

இந்த நிலையில், இன்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய கே.சி.வீரமணி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கே.சி.வீரமணி

``எவ்வளவு செலவு பண்ணியிருக்கிறோம். ஆனாலும், கட்சியில இருந்து பத்து பைசா கூட கைநீட்டி வாங்கினது இல்ல. என்னோட மனசாட்சி, நாலுபேருக்கு உதவி பண்ணனும். அவ்வளவுதான். `அ.தி.மு.க சார்பாக ஆதரவு கொடுக்கிறோம்’னு சொன்னோம். அவங்க நமக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறாங்க. கொடுக்காமலிருக்கிறாங்க. அது அவங்க விருப்பம்.

நீங்க எந்த நேரம் வேணாலும் என்னை வந்து சந்திக்கலாம். எம்.எல்.ஏ பதவி இருக்கு. அந்த பதவியை பயன்படுத்தி உங்களுக்குத் துணையாக இருப்பேன். இந்த இயக்கத்துக்கு துணையாக இருப்பேன். நமக்குப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான். கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் பின்னாடிதான் நிற்கிறோம். சில பிரச்னைகளால `நெருப்புல குதி’னு சொன்னால் ஏத்துக்க முடியாது. இதையெல்லாம், நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கனு நெனைக்கிறேன். எது நியாயம்? எது தப்பு?னு பின்னாடி வரிசையில உட்காந்துகிட்டு மனசுல பதிய வச்சி, `எப்படி பண்ணா சரியா இருக்கும்?னு முடிவு பண்ணியிருக்கிறேன். புதிய மாவட்டச் செயலாளருக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்க. எடப்பாடியார் தான் எங்கள் தலைவர். மாற்றுக் கருத்து இல்லை’’ என்று உருக்கமாக பேசினார் கே.சி.வீரமணி.

'மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்!' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க

`உலகப் பொருளாதாரம் சரிவின் விளிம்பில்... 1970களை மிஞ்சும் பேரழிவு?' - சிங்கப்பூர் பிரதமர் எச்சரிக்கை

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பெருவழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை விட மிக மோசமான 'ஸ்டாக்ஃபி... மேலும் பார்க்க

பெட்ரோல்: "மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் விலை உயர்வைத் தாங்கியிருக்க வேண்டும்" - அன்புமணி

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

முதல்வர் டு எதிர்க்கட்சி தலைவர் டு முதல்வர்! - கேரளாவில் ஒரே நாளில் வந்த அறிவிப்பு!

கேரள சட்டசபை ​எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசனை முதலமைச்சராக காங்கிரஸ் நேற்று தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சராக இருந்த பினராயி விஜயனை எதிர்க்கட்சித் தல... மேலும் பார்க்க

'டி.ஆர்.பி. ராஜா வருத்தப்பட்டு பேசினார்; இது தெரிந்தால் சீட் வேண்டாம் என.!' - எம்.எல்.ஏ காமராஜ்

மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காமராஜ், த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் முன்னாள் மன்னார்குடி எம்.... மேலும் பார்க்க

புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' - மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மி... மேலும் பார்க்க