செய்திகள் :

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு; தாலுகா அலுவலகங்களில் சிக்கிய ரூ. 82 லட்சம் லஞ்ச பணம்? விவரம் என்ன?

post image

தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் இணைந்து நேற்று (17.07.2026) திடீர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

DVAC Release
DVAC Release

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கமாக 13,78,250 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஜி-பே மூலம் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் 68,32,582 ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தமாக 82,10,832 ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை செய்தி வெளியிட்டிருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் ரூ.2,22,200 கைப்பற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக கன்னியாகுமரி (அகஸ்தீஸ்வரம்) தாலுகா அலுவலகத்தில் ரூ.1,50,000, விருதுநகர் (வெம்பக்கோட்டை) தாலுகா அலுவலகத்தில் ரூ.1,40,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜி-பே மூலம் கண்டறியப்பட்ட சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளில் கரூர் தாலுகா அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. அங்கு ரூ.16,33,654 மதிப்பிலான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் (ரூ.12,40,000), மூன்றாவது இடத்தில் கள்ளக்குறிச்சி - சின்னசேலம் தாலுகா அலுவலகம் (ரூ.9,00,000) இடம்பெற்றுள்ளன.

DVAC Release
DVAC Release

அதேபோல், சேலம் (ரூ.8,51,498), கோயம்புத்தூர் (ரூ.7,50,000), சென்னை - சோழிங்கநல்லூர் (ரூ.6,36,000), செங்கல்பட்டு - வண்டலூர் (ரூ.2,00,000), தென்காசி (ரூ.1,68,200), மதுரை - திருமங்கலம் (ரூ.1,25,000), மயிலாடுதுறை - சீர்காழி (ரூ.1,16,500) உள்ளிட்ட பல தாலுகா அலுவலகங்களிலும் சந்தேகத்துக்குரிய ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 35 தாலுகா அலுவலகங்களில் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க