செய்திகள் :

வங்கதேசம்: ஆவாமி லீக் இல்லா தேர்தல்; மேஜிக் நம்பரைத் தாண்டிய பிஎன்பி - தாரிக் ரஹ்மான் பிரதமர்?

post image

வங்க தேசத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, ஆவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா, 2024 ஆகஸ்டில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர்.

ஹசீனாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர் போராட்டக் குழுவினர் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

வங்கதேசத் தேர்தல்
வங்கதேசத் தேர்தல்

இடைக்கால அரசு, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சர்வாதிகாரத்தைத் தடுக்கவும் 'ஜூலை சாசனம்' (July Charter) என்ற பெயரில் `பிரதமரின் அதிகாரத்தைக் குறைத்தல், பதவிக் கால நிர்ணயம்' போன்ற புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிந்தது.

இந்த நிலையில்தான் வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 300 நாடாளுமன்றத் தொகுதியில், வங்க தேசத்தில் ஆட்சி அமைக்க 151 இடங்களில் வெற்றிப்பெற வேண்டியது அவசியம்.

இந்தத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைமையிலான கூட்டணியும், ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) தலைமையில், 2024 மாணவர் எழுச்சியில் உருவான தேசிய குடிமக்கள் கட்சி (NCP) உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணி என இரு கூட்டணிகள் நேருக்கு நேர் மோதின.

நேற்று (12-ம் தேதி) காலை 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 4:30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவின் போது நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை என சுமார் 10 லட்சம் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வங்கதேசத் தேர்தல்
வங்கதேசத் தேர்தல்

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி, இரவு முழுவதும் நடைபெற்றது. பிப்ரவரி 13 (இன்று) காலைக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தற்போதுவரை அறிவிக்கப்பட்ட முடிவில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கத் தயாராகியுள்ளது.

வங்க தேச ஊடகங்கள் வழங்கிவரும் தகவலின்படி வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 151 இடங்கள் என்ற பெரும்பான்மை அளவைத் தாண்டி, 185 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி தலைமை வகித்தக் கூட்டணி 56 இடங்களை வென்றுள்ளது. இன்னும் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் கூறினாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 14 தனித்தனி வன்முறைச் சம்பவங்களில் 72 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜமாத்-இ-இஸ்லாமி
ஜமாத்-இ-இஸ்லாமி

கடந்த 30 ஆண்டு வங்க தேச அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஆவாமி லீக் கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலுடன் சேர்த்து 'ஜூலை சாசனம்' குறித்த மக்கள்தீர்ப்பு வாக்கெடுப்பும் (Referendum) நடைபெற்றது. அதில் பெரும்பாலான மக்கள் (சுமார் 70% மேல்) 'ஆம்' (Yes) என்று வாக்களித்துள்ளனர். இது அரசியலமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் எனக் கருதப்படுகிறது.

'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained

'தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் 'வரி'. இதற்கு ட்ரம்... மேலும் பார்க்க

TVK: சேலம் மேடைக்கு வந்த விஜய்; தொடங்கியது தவெக நிர்வாகிகள் கூட்டம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தவெக விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் ந... மேலும் பார்க்க

விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த... மேலும் பார்க்க

மகளிருக்கு ரூ.5000: "பயத்தில் வந்த அறிவிப்பு; பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?" - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த... மேலும் பார்க்க

`சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெ... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று பேசுகிறார் விஜய் - சீலநாயக்கன்பட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெறுவது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் ... மேலும் பார்க்க