Vijay: '''நம்மள கலாய்ச்சிட்டாங்க, அதனால அதைப் பண்ண வேண்டாம்'னு விஜய் சொன்னார்"- ...
வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?
இந்த வாரத்தில் மூன்று நாள்கள் தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
நேற்று முன்தினம் (ஜனவரி 5) இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவியது.
இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது.
அது நேற்று (ஜனவரி 6), காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்.
பின், அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு நகரலாம்.
எந்தெந்த தேதிகளில் எங்கே மழை?
இதனால், நாளை மறுநாள் (ஜனவரி 9), மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்.
செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம்.

வரும் ஜனவரி 10-ம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யலாம்.
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
வரும் ஜனவரி 11-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம்".
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 6, 2026


















