Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
`வலுவிழந்த' காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை' அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை?
சென்னையையும், சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை இன்னும் விட்டப்பாடில்லை.
இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி,
டிட்வா புயலின் எச்சமாக தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்துவிட்டது.
தற்போது அது வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
அது இன்னும் அடுத்த 12 மணிநேரத்திற்கு மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வரும்.
அதன் பிறகு, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்தப் பகுதியாக பலவினமடைந்துவிடலாம்.

இன்று...
திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இங்கே அதி கனமழை பெய்யலாம்.
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கே கனமழை பெய்யலாம்.
நாளை
கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இங்கு மிக கனமழை பெய்யலாம்.
சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கனமழை பெய்யலாம்.


















