செய்திகள் :

வாட்ஸ்அப் மூலம் உயர் நீதிமன்ற பெண் நீதிபதியிடம் கைவரிசை; ரூ.6.02 லட்சம் பறித்த சைபர் கிரிமினல்கள்

post image

நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் தொடர்ந்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் டிஜிட்டல் கைது மூலமும் இந்த மோசடி நடைபெறுகிறது. இந்த மோசடி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியையும் விட்டு வைக்கவில்லை. மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் பெண் ஒருவர் தனது கிரெடிட் கார்டில் தனக்கு கிடைத்த சன்மான பாயிண்ட்களை எப்படி பணமாக்குவது என்று தெரியாமல் இருந்தார்.

இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து வாடிக்கையாளர் சேவை எண் இணையத்தில் கிடைக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இணையத்தில் தேடினார். இதில் ஒரு போன் நம்பர் கிடைத்தது. அந்த நம்பரில் அப்பெண் தொடர்பு கொண்டார்.

போனில் பேசிய நபர் அப்பெண் நீதிபதிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு பைல் அனுப்பினார். அந்த பைலை அப்பெண் நீதிபதியால் தனது ஐபோனில் திறக்க முடியவில்லை. இதையடுத்து ஆண்ட்ராய்டு போனில் சிம்கார்டு போட்டு பைலை திறக்கும்படி போனில் பேசிய நபர் கேட்டுக்கொண்டார்.

அப்பெண் நீதிபதியும் சிம்கார்டை கழற்றி ஆண்ட்ராய்டு போனில் போட்டு திறந்து பார்த்தார். அப்பெண் மர்ம நபர் அனுப்பிய பைலை திறந்தவுடன் அப்பெண் நீதிபதியின் சிம்கார்டில் இருந்த வங்கி விபரங்களை பயன்படுத்தி ரூ.6.02 லட்சத்தை மர்ம நபர் எடுத்துக்கொண்டார். இது தொடர்பாக அப்பெண் நீதிபதிக்கு மெசேஜ் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் நீதிபதி சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது கிரெடிட் கார்டை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பாக மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சைபர் கிரிமினல்கள் நீதிபதியிடம் கைவரிசை காட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Age is Just a number Bro... 60 வயதிலும் இளமை: ரகசியம் சொல்லும் சுவான்டோ டான்

சிங்கப்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் மாடலுமான சுவான்டோ டான் (Chuando Tan), அண்மையில் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல்வதைப் போன்ற இவரது இளமை மாறாத தோற்றம்... மேலும் பார்க்க

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாகங்கள்!

`தமிழ்நாடு 2030 இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்பது திண்ணம்! திண்ணம்!' - தமிழ்நாடு அரசுதமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும்... மேலும் பார்க்க

ஈரான் போர்; வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை செய்த அதிபர் ட்ரம்ப் - புகைப்படங்கள் வைரல்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள்... மேலும் பார்க்க

'வாட்ஸ்அப் உரையாடலை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது' - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒருவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் குடும்ப நீதிமன்றம், மனைவி தரப்பு ... மேலும் பார்க்க

பகுவா பாடல்கள் படி மாணவர்களுடன் ஹோலி கொண்டாடிய ஆளுநர் ரவி | Video

பாடல்கள் படி ஆளுநர் ஆர். என் ரவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார். இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்து வ... மேலும் பார்க்க

மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் ... மேலும் பார்க்க