செய்திகள் :

IND vs NZ: "இந்தப் பயணம் எனக்கு அவ்வளவு எளிதானதாக இல்லை"- அபிஷேக் சர்மா எமோஷனல்

post image

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு அபிஷேக் சர்மா முக்கிய பங்காற்றியிருந்தார்.

ind vs nz
ind vs nz

போட்டிக்கு பிறகு பேசிய அபிஷேக் சர்மா, "கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். இப்படியொரு பெரிய தருணத்தில் நான் இருந்ததில்லை. ஆனால், அனைவரும் என் மீது நம்பிக்கையோடு இருந்தார்கள்.

இந்தப் பயணம் எனக்கு அவ்வளவு எளிதானதாக இல்லை. கடந்த ஒரு வருடமாக நான் சிறப்பாக ஆடியிருந்தேன். ஆனால், உலகக்கோப்பையில் ஆரம்ப போட்டிகளில் நான் சிறப்பாக ஆடவில்லை.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

தொடரின் இடையில் கொஞ்சம் எமோஷனலாக இருந்தேன். கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பேசினேன். அவர்கள்தான் என்னால் போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என நம்பிக்கையூட்டினார்கள்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய திலக் வர்மா, " கடந்த ஒன்றரை வருடமாக அணிக்காக எந்த பொசிசனிலும் இறங்கி பேட்டிங் ஆட பயிற்சி பெற்றிருந்தோம். அணிக்கு தேவையான நேரத்தில் பேட்டிங் ஆட தயாராக இருந்தோம்.

பீல்டிங்கில் நாங்கள் இன்று சிறப்பாக செயல்பட்டோம் என்று சொல்லமாட்டேன். ஆனால், சில நல்ல கேட்ச்களை பிடித்தோம். அடுத்த சில நாட்களுக்கு முழுமையாக பார்ட்டிதான். பார்ட்டியை முடித்துவிட்டு ஐ.பி.எல் இல் சந்திப்போம்" என்றிருக்கிறார்.

T20 WC: "என்னைபோல இந்த தருணத்திற்காக நீயும் ஆசைப்பட்டாய்.!"- மனைவிக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிரடி காட்டிய ... மேலும் பார்க்க

T20 WC: இந்திய தேசத்தின் சொத்து; எதிரணியினருக்கு சிம்ம சொப்பனம் - பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!

2024 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் விராட் கோலி பும்ராவை ‘இந்திய நாட்டின் சொத்து’ என்று பாராட்டி இருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து அதே வார்த்தைகளில் மீண்டும் பும்ராவை ஏகத்துக்கும் புகழ்ந்... மேலும் பார்க்க

IND Vs NZ: `கார் விபத்தில் என் சகோதரியை இழந்துவிட்டேன்; இந்த வெற்றியை...' - இஷான் கிஷன் எமோஷனல்

அகமதாபத்தில் நேற்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையைச் சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் ம... மேலும் பார்க்க

IND vs NZ: "எனது அடுத்த இலக்கு தங்கப்பதகத்தை வெல்வதுதான்.!"- கேப்டன் சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறது. உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர... மேலும் பார்க்க