செய்திகள் :

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர்: காலையில் தரிசனம் செய்தாலே அஸ்வமேத யாகம் செய்த பலன்!

post image

தமிழகத் திருத்தலங்களில் திருவண்ணாமலை எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவுக்கு திருச்சுழித்த் தலத்துக்கும் உண்டு. காரணம் இங்கேதான் மகான் ரமணர் அவதரித்தார். மாணிக்கவாசகர் பாடிய அருளிய தலமும் இது. ஒருமுறை தரிசனம் செய்தாலே மனதின் கவலைகளைப் போக்கிவிடுவதோடு வேண்டுதல்களையும் விரைந்து நிறைவேற்றுவாராம் இத்தல ஈசன். வாருங்கள், இத்தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

விருதுநகருக்குக் கிழக்கே 40 கி.மீ. தூரத்திலும் மதுரைக்குத் தெற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருச்சுழி என்னும் ஊர்.பாண்டி பதினான்கு என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் 10-வது பெருந்தலம் இது. இங்கேதான் அருள்மிகு துணைமாலை அம்மை உடனாய அருள்மிகு திருமேனிநாதர் கோயில் கொண்டிருக்கிறார்.

திருச்சுழி திருமேனிநாதர்

பல யுகங்களுக்கு முன்னால் - சந்திரசேனன் எனும் பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில், பிரளயமெனப் பொங்கி வந்ததாம் கடல். மன்னன், சிவனாரை வணங்கித் தொழுதான். அவனின் வேண்டுதலை ஏற்றுப் பிரளயத்தை அப்படியே சுழிக்கச் செய்து, நிலத்துக்குள் புகச் செய்தாராம் சிவனார். அங்ஙனம் நீர் சுழித்ததால், இத்தலம் சுழியல் என்று பெயர்பெற்றது என்கிறது தலபுராணம்.

கௌதமருக்கும் அகலிகைக்கும் சிவபெருமானும் பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்தத் தலம் இது. இரணியாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தைக் கவர்ந்து சென்று ஒளித்து வைத்தான். அன்னையை மீட்க வராக அவதாரம் எடுத்தார் திருமால் என்பது நாமறிந்த திருக்கதை. இரணியாட்சன் தன்னைத் தீண்டிய பாவம் தீர, இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி, திருமேனிநாதரை வழிபட்டுத் துயரம் தீர்ந்தாளாம் பூமிப்பிராட்டி. பூமிதேவி வழிபட்டதால், இறைவனாருக்கு பூமிநாதர், பூமேசர் மற்றும் புவனேசர் ஆகிய திருநாமங்களும் உண்டு. திருமேனிநாதர் என்பது தேவாரத் திருநாமம்.

திருச்சுழி திருமேனிநாதர் கோயில் அம்பிகை

அம்பிகை துணைமாலை நாயகி. தோற்றத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போன்றே திகழ்கிறாள். திரிபங்கி திருக்கோலத்துடன் அருள்கிறாள். இத்தலம், ஒரு காலத்தில் ருத்ர பூமியாக விளங்கியதாம். பூமியை சாந்தப் படுத்த, அம்பாள் சுயம்பு நாயகியாக சுபங்கரியாக (நன்மை செய்பவள்) தோற்றம் தந்தாள் என்கிறது புராணம். அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில், மேலே ஸ்ரீசக்கரம் வடிக்கப்பட்டுள்ளது. தீமைகளைக் களைந்து நன்மைகளை நிறைய அருள்பாலிப்பவள் ஆதலால், இந்த அம்பிகைக்குச் சகாயவல்லி என்றும் ஒரு திருநாமம் உண்டு. அடியார்களுக்குச் சகாயம் செய்பவளாம்.

திருச்சுழியல் தலத்துக்கு நிறைய பெருமைகள் உண்டு. பாண்டிய நாட்டை, அழகானதொரு பெண்ணாக உருவகம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணின் அவளின் நாபிதான் திருச்சுழியல் எனும் இந்தத் தலம் என்று சித்திரித்துப் போற்றுகிறார், திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதியார்.

இங்கு வந்து திருமேனி நாதரைக் காலையில் தொழுதால், பரிமேத வேள்வி... அதாவது அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். உச்சிப்போதில் வணங்கினால், ராஜ சூய யாகத்தின் பலன் கிடைக்கும்; மாலையில் வழிபட்டால், ஜீவன்முக்தி கிடைக்கும் என்கிறது தல வரலாறு.

திருச்சுழி திருமேனிநாதர்

மற்ற சிவாலயங்களில் ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்தால் கிடைக்கும் பலன், இந்தத் தலத்தில் சிவராத்திரி அன்று ஒரேயொரு வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்தாலே கிடைத்து விடுமாம். இந்தத் தலத்தில் அன்பர்களுக்கு ஒரு பிடி அன்னமிட்டால், ஆயிரம் அஸ்வமேத யாகங்களின் பலன் கண்டிப்பாக உண்டு. இந்தத் தலத்தை அடைந்தாலே போதும், அறிந்தோ அறியாமலோ பண்ணிய பாவமெல்லாம் பஞ்சாகப் பறக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்: திருமணத் தடை நீக்கும் ஆயில்ய நாக பூஜை!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது முத்தரசநல்லூர் ரயில்வே கேட். அதைத் தாண்டினால், கடைவீதி அக்ரஹாரம் பகுதியில் குருவாயூரப்பன் கோயில் அ... மேலும் பார்க்க

பாபநாசர் கோயில்: `பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்கள் கேரளாவில் விற்பனை?' - அதிர்ச்சி குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம், பாபநாசம் தாமிரபரணிக் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாசர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பரிகார ஸ்தலம் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில்: சுகப்பிரசவம் அருளும் அம்பிகை!

கும்ப கோணம்-தஞ்சாவூர் முக்கிய சாலையில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது சக்கராயி கோயில். இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம். இங்கு வழிபட்டால... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ஸ்ரீசக்கரபாணி பெருமாள்: பிரச்னை தீர்க்கும் நெய்தீப வழிபாடு!

பெருமாளின் ஆயுதங்களில் முக்கியமானது சக்கரம். பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அது அவரின் சக்கரத்துக்கும் உண்டு என்பார்கள். அதனால்தான் அவரை சக்கரத்தாழ்வார் என்று போற்றும் வழக்கமும் இருக்கிறது. சக்கரத்தாழ... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டம், கோபுரப்பட்டி ஸ்ரீஆதிநாயகபெருமாள்: இவரை தரிசித்தால் வாழ்வில் உணவுப் பஞ்சமே வராது!

புரட்டாசியில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் பழைமையான பெருமாள் ஆலயங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி ஒரு தலம் தான் கோபுரப்பட்டி. திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர... மேலும் பார்க்க

திருப்பதி போக நேரமில்லையா? இங்கே போங்க... பிரச்னைகள் தீர்க்கும் மட்டைத் தேங்காய் பிரார்த்தனை!

புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான். அதுவும் திருப்பதி பெருமாளை வழிபடுவது இந்த மாதத்தில் மிகவும் விசேஷம். திருப்பதியில் இந்த மாதம் முழுவதுமே கூட்டம் அதிகம் இருக்கும். எனவே திருப்பதி செல்லப் பலர் தய... மேலும் பார்க்க