விழுப்புரம்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ-யால் மகளுக்கு ஏற்பட்ட சோகம் - கதறிய கணவன்; கத்தியு...
வேலூர்: போதைப்பொருள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது - கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்
வேலூர், பழைய காட்பாடி செல்வம் நகர் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக பிரம்மபுரம் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில், 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போதைப்பொருள் பயன்பாடும், விற்பனையும் இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, சோதனையை தீவிரப்படுத்தினர். அதில், 50 போதை மாத்திரைகள், 450 கிராம் கஞ்சா மற்றும் 250 கிராம் கஞ்சா ஆயில் மற்றும் 6 எடை எந்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், 7 மாணவர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்தியது மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் விற்பனைச் செய்து வந்ததாகவும் தெரியவந்தது.
வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருள்களை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் 7 மாணவர்களை கைது செய்த போலீஸார், மற்றவர்களை எச்சரித்து விடுவித்தனர். கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும், விடுக்கப்பட்ட மாணவர்களும் வேலூர் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்கள். இந்த வழக்குத் தொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















