செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வைபவம்; தமிழக, கேரள பக்தர்கள் தரிசனம்

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும். இது பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும் ஆகும். தமிழக அரசின் அரசு சின்னமாக இக்கோயிலின் கோபுரம் விளங்குவது இதன் சிறப்பை எடுத்துரைக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

கைசிக ஏகாதசியின் புராண வரலாறு:

கைசிக ஏகாதசி, கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று வரும். பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தர் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாளை கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைக்கிறார்கள்.

நம்பாடுவார் தனது பெருமாள் பக்தியின் காரணமாக, தன்னை உண்ண வந்த பிரம்ம ராட்சஸனிடம் ஒரு வாய்ப்பு கேட்டு, பெருமாளைப் பாடிவிட்டு வந்து தன்னை உணவாகக் கொள்ளுமாறு கூறினார். பெருமாளைப் பாடி வந்த நம்பாடுவார், கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சஸனின் சாபத்தை நீக்கினார் இதுதான் கைசிக ஏகாதசியின் புராண வரலாறு.

108 போர்வை சாற்றும் வைபவத்தின் சிறப்பு:

இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்குப் பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனைப் பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

108 போர்வை சாற்றுதல்
108 போர்வை சாற்றுதல்

அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் தமது கருட சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளுவார். இது வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறும் அரிய காட்சியாகும்.

யாருக்கெல்லாம் போர்வை சாற்றப்படுகிறது:

இங்கு ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகிய அனைவருக்கும் 108 போர்வைகள் சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் குறிக்கும் வகையில் 108 போர்வைகள் சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

108 போர்வை சாற்றுதல்
108 போர்வை சாற்றுதல்

அதிகாலையில் கைசிக புராணம் விரிவாக வாசிக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தில் சுக்லபட்சத்தில் வரும் கைசிக ஏகாதசி அன்று உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதிகாலை வேளையிலேயே விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இந்த சிறப்பு வைபவத்தைத் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் த... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்தான வழக்கில் 'மலை உச்சியில் க... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மகா தீபம்: `தளர்வான கற்பாறைகளால் ஆபத்து' - பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24-ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்ப... மேலும் பார்க்க

சபரிமலை: மகரவிளக்கு பூஜையை ஒட்டி எரியும் ஆழி குண்டம்; இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள் | Photo Album

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜைகளை ஒட்டி கொழுந்துவிட்டு எரியும் ஆழி குண்டம். இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள்.சபரிமலை ஐயப்பன் கோயில்சபரிமலை ஆழி குண்டம்சன்னிதானத்தில் நமஸ்காரம் செய்யும... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு; நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்; ஏன் தெரியுமா?

திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு! நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்! ஏன் தெரியுமா! தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இத... மேலும் பார்க்க

சேலம்: `56 அடி உயரம்’ - பிரமாண்ட ராஜமுருகன் சிலை பிரதிஷ்டை!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அணைமேடு பகுதியில் அருள்மிகு ராஜ முருகன் சிலை 56 அடியில் பிரம்மாண்ட அமைக்க திட்டமிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க