Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் பணமோசடி; 10 மாதங்களில் ஆயிரம் கோடி இழந்த மும்பை மக்கள்; பகீர் பின்னணி
மும்பையில் அடுத்தடுத்து சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து 4 மற்றும் 11 கோடியை மர்ம ஆசாமிகள் அபகரித்துக்கொண்டனர். இந்த சைபர் கேங்க் தொடர்ந்து தனது வேலையைக் காட்டி வருகிறது.
அவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கி 1.7 லட்சத்தை இழந்திருக்கிறார். மும்பை போரிவலியைச் சேர்ந்த 26 வயது பெண்ணிற்குக் கடந்த மாதம் 19ஆம் தேதி மர்ம நம்பரிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் டெல்லி போலீஸ் என்றும், விசாரணையில் உங்களது பெயர் ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயல் தொடர்பான பணமோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
உடனே அப்பெண் தனக்கு அப்படி எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். போனில் பேசிய நபர், 'கைது செய்யப்படுவீர்கள்' என்று மிரட்டினார். தொடர்ந்து அதே நபர் வீடியோ காலில் அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்றும், மேற்கொண்டு உங்களிடம் விசாரிக்க வேண்டியிருப்பதால் ஹோட்டல் ஒன்றில் ரூம் புக்கிங் செய்து அங்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். அப்பெண்ணும் ஹோட்டல் அறையில் அறை எடுத்தார். அங்குச் சென்றதும் உங்களது உடம்பு முழுவதும் சோதனை செய்யவேண்டியிருக்கிறது என்றும் எனவே அனைத்து ஆடைகளையும் களையும்படியும் கேட்டனர். அவர்கள் சொன்னபடி அப்பெண்ணும் செய்தார்.
அதோடு மேற்கொண்டு பணமோசடியில் தொடர்பு கொண்டிருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள உங்களது வங்கிக்கணக்கில் உள்ள ரூ.1.78 லட்சத்தை நாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அப்பெண்ணும் பணத்தை அனுப்பினார். அப்படியும் தொடர்ந்து பணம் கேட்டனர். அதன் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதே போன்று போரிவலி பகுதியில் வசிக்கும் 68 வயது பெண்ணிடம் ரூ. 78 லட்சத்தை சைபர் கிரிமினல்கள் அபகரித்துக்கொண்டனர்.
68 வயது பெண் எச்.பி.சி.எல் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த மாதம் 9ஆம் தேதி இப்பெண்ணிற்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து பேசுவதாகவும், தனது பெயர் அஜய் குமார் என்றும், பெங்களூருவில் பதிவு செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கில் உங்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதன் பிறகு தீபாலி என்ற மற்றொரு பெண் மும்பை பெண்ணிடம் விசாரித்தார். அவர், தான் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினார். மேலும் இவ்வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படவேண்டுமானால் உங்களது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யவேண்டும் என்றும், விசாரணைக்குப் பிறகு பணத்தை திரும்ப கொடுத்துவிடுவோம் என்று அப்பெண் அதிகாரி தெரிவித்தார். மும்பை பெண்ணும் 78 லட்சத்தை அனுப்பி வைத்தார். அதன் பிறகுதான் இது குறித்து தனது மகனிடம் அப்பெண் கலந்து ஆலோசித்தார்.
அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரிய வந்தது. உடனே இது குறித்து சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் கடந்த வாரம் 75 வயது பெண்ணிடம் 11 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக முன்னாள் வங்கி அதிகாரி கைஃப் மன்சூரி என்பவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
10 மாதத்தில் 1,012 கோடி மோசடி
மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்வது, சோசியல் மீடியா மூலம் மோசடி செய்வது போன்ற இணையதளக் குற்றங்கள் கடந்த 10 மாதத்தில் 286 மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டில் இது ரூ.262 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் 10 மாதத்தில் இது 1012 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது போன்ற மோசடியில் சீனா மற்றும் துபாய் கும்பல் ஈடுபடுவதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் 95 லட்சத்தை இக்கும்பல் மோசடி செய்துள்ளது. அக்கம்பெனியில் வேலை செய்யும் மூத்த மேலாளர் ஒருவருக்கு வந்த போனில் உங்களது கம்பெனி இயக்குநர் அரசு அதிகாரியுடன் முக்கிய ஆலோசனையில் இருப்பதாகவும், கம்பெனி வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்க சொன்னதாகவும் அந்த நபர் குறிப்பிட்டார்.
உடனே மேலாளர் வங்கிக்கணக்கில் 95 லட்சம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த பணத்தை, தான் சொல்லும் வங்கிகணக்கிற்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். மேலாளரும் அதன் படி அனுப்பினார். அதன் பிறகு தனது மூத்த அதிகாரிக்கு மேலாளர் சொன்னபோதுதான் அது மோசடி என்று தெரிய வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆடிட்டர் ஒருவர் இது போன்று இன்ஸ்டாகிராமில் வந்த பங்குச்சந்தை விளம்பரத்தைப் பார்த்து அதில் வந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பணத்தை முதலீடு செய்து 29 லட்சத்தை இழந்துள்ளார். கடந்த நவம்பர் 13ஆம் தேதி 80 வயது பெண்ணை டிஜிட்டல் முறையில் கைது செய்து மர்ம கும்பல் 22 லட்சத்தைப் பரித்துள்ளது.
கடந்த 10 மாதத்தில் 1,012 கோடி ரூபாய்யை மும்பை மக்கள் இது போன்ற இணையத்தள மோசடியில் இழந்துள்ளனர். ஆனாலும் இன்னும் மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு இல்லாமல் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். மத்திய விசாரணை ஏஜென்சிகள் தாங்கள் யாரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்வது கிடையாது என்று தெரிவித்துள்ளது. அதோடு பொதுமக்கள் தங்களுக்கு வரும் லிங்க்கைகளை கிளிக் செய்யும்போது கவனத்துடன் செயல்படவேண்டும் என்றும் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!