செய்திகள் :

அதிகரித்து வரும் சாமியானா பந்தல்; நலிந்து வரும் தென்னந்தட்டி தொழில் - தொழிலாளர்களின் கோரிக்கை என்ன?

post image

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி ஊராட்சிக்குபட்டது தில்லைவனம் தோப்பு கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னந்தட்டி பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னந்தோப்புகளில் உள்ள ஓலைகளை கொள்முதல் செய்து அதனை காய வைத்து தண்ணீரில் போட்டு பக்குவப்படுத்தி அதை தென்னந்தட்டிகளாக பின்னுகிறார்கள். தென்னந்தட்டி பின்னும் தொழிலாளர்களுக்கு ஒரு தட்டிக்கு ரூ.2 கூலியாக வழங்கப்படுகிறது.

காய வைக்கப்பட்டுள்ள தென்னந்தட்டிகள்

அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூலியாக பெறுகின்றனர். இப்பகுதியில் பின்னப்படும் தென்னந்தட்டிகள் தரமாகவும், உறுதியாகவும் இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது விற்பனை குறைந்துள்ளதாக கவலை தெரிவிக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக வீடு கட்டுபவர்கள், வீட்டின் மேற்கூரைகளில் ஆஸ்பெஸ்டாக்ஸ் ஷீட், தகர ஷீட், கூலிங் ஷீட் ஆகியவை போடப்படுவதுதான் என்கிறார்கள். திருமணம், கோயில் திருவிழா உள்ளட்டவைகளுக்குக்கூட தென்னந்தட்டி பந்தல் அமைப்பதற்கு பதிலாக சாமியானா அல்லது தகர மேற்கூரை அமைக்கிறார்கள்.

தென்னந்தட்டி பின்னும் தொழிலாளர்கள்

இதுகுறித்து தென்னந்தட்டி பின்னும் பெண் தொழிலாளி வேலம்மாளிடம் பேசினோம், “நாங்கள் தலைமுறை, தலைமுறையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தென்னை ஒலைகளை கொள்முதல் செய்து வருவது ஆண்களின் வேலை. அதை பக்குவப்படுத்தி பின்னிக் கொடுப்பது எங்களின் வேலை. ஒரு காலத்தில் இங்கு பின்னப்படும் தென்னந்தெட்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆர்டர்களுக்காக முன்பணம் கொடுத்து தென்னந்தட்டி பின்னச் சொல்லுவது வழக்கத்தில் இருந்தது.

இதன் மவுசால் இரவு, பகலாக தட்டி பின்னுவோம். ஒன்றரை அடி அகலமும், ஏழு அடி நீளமும் 25 எண்ணிக்கையும் கொண்ட ஒரு கட்டு, மழைக்காலங்களில் ரூ.100-க்கும், கோடை காலங்களில் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் தென்னந்தட்டிகள் விற்பனையாகாமல் தேங்கியும் கிடக்கும். இதனை பாதுகாப்பதற்கு எந்த வசதியும் இல்லை.

பின்னப்பட்ட தென்னந்தட்டிகள்

தென்னந்தட்டிகள் சில நேரங்களில் வீணாகி விடுவதால் அரசு இத்தொழிலை புத்துயிரூட்டும் வகையில் எங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கிட வேண்டும். மழை மற்றும் வெயில்காலங்களில் தென்னந்தட்டி கட்டுகளை பாதுகாக்க சமுதாய நலக்கூடங்கள் அமைத்துத்தர வேண்டும். அத்துடன் பாரம்பர்யமான தென்னந்தட்டி பந்தல்கள அமைக்க அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

GRT: சுகாதார சேவைகளுக்கான வலுவான பாலத்தை அமைக்க உதவிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்!

இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சமூகப் பொறுப்பிற்கான தனது உறுதியை தொடர்ந்து வலுப்படுத்தி, பின்தங்கியவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சுகா... மேலும் பார்க்க

`அமெரிக்காவின் ஒரு மெயில்' அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு! ரூ.1 லட்சம் கோடி இழப்பு?

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதானி நிறுவனம் விளங்குகிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு அதானி நிறுவனத்தின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கரும்பு கட்டுகள் - பாளை சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனை!

திருநெல்வேலி: மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கரும்பு கட்டுகள்! பாளை சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனை.! மேலும் பார்க்க

'பிசினஸ்ல லாபம் வருது; ஆனா உங்க பர்சனல் அக்கவுண்ட்?' - 60 வயசுல வருந்தாம இருக்க இதைப் படிங்க!

காலையில் ஷட்டர் திறப்பதில் இருந்து இரவு கணக்கு முடிக்கும் வரை ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். "இன்னும் கொஞ்சம் ஸ்டாக் ஏத்தணும், புது பிராஞ்ச் திறக்கணும், மார்க்கெட்டிங்ல போடணும்..." என்று பிசினஸில் வரும் ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி; கரூரில் இருந்து 71 நிறுவனங்கள்! - ஏன், எதற்கு?முழு தகவல்

ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் உலகின் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கான கண்காட்சி ஹெய்ம் டெக்ஸ்டைல் என்ற பெயரில் மெஸ்ஸே என்ற அமைப்பின... மேலும் பார்க்க

கனவுகளை நிஜமாக்கும் தையல் கலை: சிந்துவின் கதை!

சிந்துவின் பயணம்….தையல் பயிற்சி எவ்வாறு ஒரு சாதாரண இல்லத்தரசியை தன்னம்பிக்கை கொண்ட, பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்ணாக மாற்றியது என்பதை நமக்குக் காட்டுகிறது.ஆரம்பகால போராட்டங்களும் கனவுகளும்ஒக்கிலி... மேலும் பார்க்க