செய்திகள் :

அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

post image

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் 2024ம் ஆண்டு திறக்கப்படுவதற்கு முன்பு அங்கு அபிநந்தன் லோதா நிறுவனம் சராயு என்ற பெயரில் குடியிருப்பு வளாக திட்டத்தை உருவாக்கி வந்தது. அதில் அமிதாப் பச்சன் 15 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி இருக்கிறார். அந்த நிலம் வாங்குவதற்காக அமிதாப் பச்சன் அதிகாலை 3 மணிக்கு அபிநந்தன் லோதாவிற்கு போன் செய்து பேசி நிலத்தை வாங்கி இருக்கிறார்.

இது தொடர்பான அனுபவத்தை அபிநந்தன் லோதா ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அவர் அதில் பேசுகையில்,''எனது போனுக்கு சில மிஸ்டு கால்கள் வந்திருந்தன. அதைத் தொடர்ந்து ஒரு மெசேஜ் வந்தது.

அபிநந்தன் லோதா

அதில், 'நான் அமிதாப் பச்சன் பேசுகிறேன், உங்களுக்கு வசதிப்படும்போது திரும்ப அழைக்கவும்' என்று இருந்தது. அதைப் பார்த்ததும் நான் பதற்றத்தில் அப்படியே நின்றுகொண்டே அவருக்குத் திரும்ப அழைத்தேன். நான் அழைத்தவுடன், அமிதாப் பச்சன் தான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டு, புனித நகரான அயோத்தியில் தனக்கென ஒரு சொந்த நிலம் வாங்க விரும்புவதாகக் கூறினார்.

தி சரயு திட்டத்தின் விலை குறித்து விசாரித்தார். பின்னர் 15 ஆயிரம் சதுர அடி குறித்து கேட்டார். நான் 15,000 சதுர அடி நிலத்தின் விலையை ₹15 கோடி எனக் கூற, அமிதாப் பச்சன் எவ்வித பேரம் பேரமும் இன்றி, அடுத்த நாள் காலையிலேயே முழுத் தொகையையும் லோதாவின் நிறுவனத்திற்கு அனுப்பி அந்த டீலை உறுதி செய்தார்'' என்றார்.

அந்த நள்ளிரவு போன் காலில் தொடங்கிய அமிதாப் பச்சனின் அயோத்தி முதலீடுகள், இன்று மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், 'தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா' (HoABL) நிறுவனத்திடமிருந்து அயோத்தியில் ₹35 கோடி மதிப்பிலான 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இது அயோத்தி நகரில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய தனிநபர் நில முதலீடாகும். அமிதாப் பச்சன் புதிதாக வாங்கியுள்ள 2.67 ஏக்கர் நிலம், 'தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா' (HoABL) நிறுவனத்தின் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமாண்ட ஆடம்பர நகரத் திட்டமான 'தி சரயு' திட்டத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது.

`18 வயதைக் கடந்த திருமணமாகாத மகளின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமை' - கர்நாடகா உயர் நீதிமன்றம்

கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டால் மனைவியுடன் இருக்கும் குழந்தைகள் 18 வயதை கடக்கும் வரை அவர்களின் படிப்பு செலவை ஏற்பது தந்தையின் கடமையாகும். கர்நாடகா மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு - பெற்றோர் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் தினம் தோறும் வருவது வழக்கம். இங்கு சொர்ணமாரி எ... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடை... மேலும் பார்க்க

பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி - வரி ஏய்ப்பு; 5 வியாபரிகளுக்கு அபராதம் மட்டும் ரூ.38 கோடி!

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.... மேலும் பார்க்க

'2600 பயணிகள், 110 கி.மீ' - நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர்

டீசலுக்கு மாற்றாக இப்போது அதிக அளவில் ரயில்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தை ஹைட்ரஜன் மூலம் தயாரித்து அதிலிருந்து ரயில்களை இயக்கும் திட்டம் நீண்ட நாட்களாகச் சோதனையில் இர... மேலும் பார்க்க