செய்திகள் :

`அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர்' - எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சி மறுசீரமைப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல வெற்றி, தோல்விகளைக் கண்ட இயக்கம். தற்போதைய தேர்தல் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டிய அவசியமில்லை. மக்களை கவர்ந்த ஒரு மாயை உருவாக்கப்பட்டது. அந்தக் கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு மாத காலத்திலேயே அதன் உண்மையை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமானது. பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல. பதவி சுகத்திற்காகவும், தங்களது பணத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அவர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுள்ளனர்” என்று விமர்சித்தார்.

அதிமுகவை பலவீனப்படுத்தவும், நிர்மூலமாக்கவும் சிலர் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், “அது எப்போதும் நடக்காது. கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

அதேபோல், இளைஞர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளுக்கு மீண்டும் புத்துணர்வு அளித்து தீவிரமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஆகஸ்ட் 17 முதல் ‘எங்கிருந்தும் பத்திரப்பதிவு’ நடைமுறை : தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக, STAR 3.0 திட்டத்தின் முதல் கட்டமான “Anywhere Registration” திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கா... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் கரூர் விசிட்; இறந்த 41 பேர் குடும்பங்களுடன் சந்திப்பு... அரசு பணி? பிரமாண்ட கூட்டம்!

தமிழக முதல்வரும், த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய், வருகின்ற 10-ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக த.வெ.க மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு செப்ட... மேலும் பார்க்க

``4 மடங்கு உயரும் மருத்துவக் கட்டணம்: 650 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகும்..!" - அண்ணாமலை

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள் தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" அந்தஸ்தைப் பெற்றுள்ளன. பொதுவாக, சாதாரண கல்லூரிகள் ஏதேனும் ஒரு அர... மேலும் பார்க்க

சர்ச்சை சுழலில் அமைச்சர் கீர்த்தனா; கடிந்து கொண்ட முதல்வர் விஜய்! - பதவிக்கு ஆபத்தா?

29 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகி, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக உயர்ந்தவர் கீர்த்தனா. முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில், கீர்த்தனாவின் வருகை பெரும் எ... மேலும் பார்க்க

`வார்த்தை விளையாட்டு வேண்டாம்..!' - திருமாவளவன் பேச்சு குறித்து மாணிக்கம் தாகூர்

“அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது” எனக் கூறிய திருமாவளவனுக்கு, மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம்... மேலும் பார்க்க

`விளம்பர மோகம்; பள்ளிக் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறல்' கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம்

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால், ஆசிர... மேலும் பார்க்க