செய்திகள் :

Bigg Boss: இந்த வருஷம் இதெல்லாம் புதுசு! - `காமன்மேன்' பிக் பாஸ் ஷோவுக்கு யார் பாஸ்?

post image

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார்.

வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல் இந்த வருடம் நிகழ்ச்சியில் 0சில மாற்றங்களைப் புகுத்தவிருக்கிறார்களாம்.

முந்தைய சீசன்களில் சினிமா, டிவி நட்சத்திரங்கள், மாடலிங் ஆட்களுடன் பிரபலமல்லாத சாதாரண நபர்களூம் போட்டியாளர்களாக பங்கேற்று வந்தனர். இவர்கள் பெரும்பாலும் விஜய் டிவியில் பணிபுரியும் ஊழியர்களின் நட்பு வட்டத்திலிருந்தோ அல்லது முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்குத் தெரிந்தவர்களாகவோ இருப்பார்கள்.

இந்த நிலையில் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே 'பிக்பாஸ் காமன் மேன்' என்ற ஒரு ஷோவை நடத்தவிருக்கிறார்கள்.

Bigg Boss House

இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்தவர்களில் இருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு 'பிக் பாஸ் காமன் மேன்' ஷோவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் முடிவில் பெர்ஃபார்மன்ஸை வைத்து சிறந்த சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் தொடர்பான கூடுதலான ஒரு அப்டேட் என்னவெனில், இதற்கு முன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது நிகழ்ச்சி. இந்த வருடம் எல்லா மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஒளிபரப்புவது குறித்து யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா என்றால் வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே விஜய் சேதுபதிக்குப் பதில் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக யார் வரப்போகிறார்கள் என்பதும் ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

பிக்பாஸ் காமன் மேனை தொகுத்து வழங்கச் சரியான ஆள் யார் என்பதை நீங்களும் கமென்ட் பண்ணுங்க பிக் பாஸ் ஃபேன்ஸ்..!

Serial update: அபிதா வெளியேறிய பின்னணி... போரட்டத்துக்குத் தயாராகும் சீரியல் ஆர்ட்டிஸ்ட்டுகள்!

'சந்தியா ராகம்' தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமலும் 'சின்னஞ்சிறு கிளியே' தொடரிலிருந்து நடிகை அபிதாவும் வெளியெறி இருக்கிறார்கள்.இரண்டு பேருமே அவரவர் நடித்து வந்த தொடர்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து... மேலும் பார்க்க

ராஜ்மோகன் எங்க உறுப்பினர்; ஆனாலும் முதல்வரை பார்க்க‌ அப்பாயின்ட்மென்ட் கிடைக்கல!- டிவி நடிகர் சங்கம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் முதலமைச்சரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறார்கள், சின்னத்திரை சங்க நிர்வாகிகள்.நடந்து முடிந்த சட்டசபைத... மேலும் பார்க்க

Serial update: மூணு பேருக்காக முடிச்சு விட்டாங்க! - வருத்ததில் ‘ஆடுகளம்’ சீரியல் ஆர்ட்டிஸ்டுகள்?

விஜய் டிவியில் நாளை மறுதினம் நிறைவடைகிறது மகாநதி சீரியல். ’சரவணன் மீனாட்சி’, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – கதிர் ஜோடிகளுக்குப் பிறகு ஜோடிக்காகவே பார்க்கப்பட்ட சீரியல் என இந்த சீரியலைச் சொல்லலாம். விஜய் ... மேலும் பார்க்க

மும்பையில் செட், 2 ஹோஸ்ட்! களமிறங்கும் பிக்பாஸ் வின்னர்.! விஜய் டிவியில் விரைவில் 'செகண்ட் லவ்' ஷோ!

விஜய் டிவியில் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருக்கிறது புத்தம் புதிய ரியாலிட்டி ஷோவான 'செகன்ட் லவ்' என்கிற பேச்சு தான் இப்போது டெலிவிஷன் உலகில் வைரல்.'பிக்பாஸ்' நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்குக் ... மேலும் பார்க்க

`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ பழைய ஜோக் தங்கதுரை

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார் `பழைய ஜோக்' தங்கதுரை.விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்... மேலும் பார்க்க

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார். இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.Kana Ka... மேலும் பார்க்க