செய்திகள் :

'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?

post image

வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.

இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே - ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம்.

இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி... இந்திய ரூபாயின் மதிப்பும் சரி... வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து மாற்றி வருகின்றனர்.

ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

ஏன் கச்சா எண்ணெய் விலை இந்தியாவிற்கு மைனஸ்?

உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்.

இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வது நிச்சயம் இந்தியாவை சற்று அசைத்துப் பார்க்கும் தான்.

ஹார்மோஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேட வேண்டும்.

ஆனால், இந்தியாவிடம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை, ஒரு மாதத்தைத் தாண்டியும் போர் நீடித்தால், இந்தியாவிற்கு இது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

இந்தச் சூழல் பாதிக்கும் முக்கிய விஷயங்களில் இந்திய ரூபாய் மதிப்பும் ஒன்று.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் என்ன ஆகும்?

இங்கே பணவீக்கம் அதிகரிக்கும். அடுத்ததாக, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்.

இது இரண்டும் நடந்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைக் கூட பாதிக்கும்.

அடுத்ததாக, அமெரிக்க டாலர்களில் கடன் வாங்கி இருக்கும் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ஏற்கெனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய முதலீடுகளை விற்றுகொண்டு வருகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தால், அவர்கள் மேலும் தங்களது முதலீடுகளை வெளியேற்றுவார்கள்.

இதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம் என்னவென்றால், ஐ.டி, ஜவுளி போன்ற துறைகள் ஏற்றுமதியில் பலனடையும்.

இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது சரியாகலாம்?

இந்தப் போர் முடிந்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வருவதில் பிரச்னை இல்லை என்கிற சூழல் உருவாகும் போதும்... இந்தியாவில் பணவீக்கம் இல்லை என்கிற நிலை உருவாகும் போதும்.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் வீழ்ச்சியை சரிசெய்ய தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருக்கிறது.

திமுக-வுக்கு நாகூர் ஹனீபா; எம்.ஜி.ஆருக்கு? - அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! | சுவடுகள் 8

அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்!நினைவுச் சுவடுகள் 08தேர்தல்கள் என்றாலே சத்தமும் இரைச்சலும்தான். தேர்தலை ஒரு திருவிழாவாக பார்க்கும் தமிழ்நாட்டில், தேர்தல் என்பது ஆட்டமும் பாட்டமும் நிறைந்ததாக... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ர... மேலும் பார்க்க

ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதிமுகவின் விசுவாசி, ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இரு... மேலும் பார்க்க

`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்க... மேலும் பார்க்க

அதிமுக-விலிருந்து மேலும் ஒரு புது கட்சி! - பெங்களூரு புகழேந்தியின் புரட்சி அதிமுகவின் நோக்கம் என்ன?

பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மேலும் ஒரு புதிய கட்சியை தொடங்கியுள்ளார் வழக்கறிஞர் வா.புகழேந்தி.புரட்சி அதிமுகதிமுக-விலிருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி ஆட்... மேலும் பார்க்க