செய்திகள் :

`அது பழைய காலம்... நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி? நிரூபியுங்கள்' - திடீரென கொந்தளித்த ஆனந்த்

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை அறிவித்தார். வேளாண் அமைச்சர் திருப்பதி லட்டோடு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒன்றே குலம் ஒருவன் தேவன் என்கிற கொள்கையை கொண்டது திமுக.

தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகள் ஏன் நிரப்பப்படவில்லை? தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் பதிலளிக்க ஆணையர்கள் இல்லை என்கிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்கிறோம் எனக் கூறும் அரசு தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகளை நிரப்பாமல் இருப்பது ஏன்?

ரகுபதி
ரகுபதி

ஒரு ஆங்கில பத்திரிகையில் பார்த்தேன். அதில் காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கொள்கை வழிகாட்டு குழுவில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அது உண்மையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஸ்வநாதன், " பிரவீன் சக்கரவர்த்தி இந்த அவையின் உறுப்பினர் கிடையாது. தமிழக அரசின் எந்த குழுவிலும் அவர் பொறுப்பில் இல்லை. பத்திரிகைகள் ஒரு செய்தியை பலவாறு எழுதுகின்றன. அதை வைத்துக் கொண்டு பேச வேண்டாம்" என்றார்.

தொடர்ந்து பேசிய ரகுபதி, " நிதிநிலை அறிக்கையில் கசிவு...கசிவு என புது வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். அது என்ன கசிவு? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், " ஒவ்வொரு துறையிலும் எப்படி நிதிக் கசிவு நடந்திருக்கிறது என்பதை தணிக்கை செய்து வருகிறோம்.

மரிய வில்சன்
மரிய வில்சன்

மூன்று துறைகளுக்கான தணிக்கை முடிந்துவிட்டது. நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்தே முதல்வர் எங்களை அழைத்து தணிக்கை பற்றி கேட்டிருக்கிறார். கடந்த முறை பார்ட்டி பண்ட் என்றவுடன் அவையை விட்டு வெளியேறினீர்கள். இனி அப்படி இருக்காது. எல்லாவற்றையும் தணிக்கை செய்து கோப்புகளோடு அவையில் நிரூபிப்போம்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய ரகுபதி, " இப்போது பில் வாங்க ஒவ்வொரு அலுவலகத்திற்கும் போய் பாருங்கள். நீர்வளத்துறையில் 3% கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள். பொதுப்பணித்துறையில் 5% கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள்" என்றார்.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆனந்த், " ஆதாரத்துடன் பேச வேண்டும்; அது பழைய காலம்... இந்தக் காலத்தில் ஒத்த ரூபாய் நாங்கள் வாங்கினால், நாளைக்கே எங்களை இங்கே உட்கார வைக்க மாட்டார் எங்களுடைய முதலமைச்சர்; வாயால் பேசுவது எல்லாம் சரிதான். நீங்கள் நிரூபியுங்கள் ...எதுமே இல்லாமல் நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி?" என்று கேட்டிருக்கிறார்.

"ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றியது உங்கள் தலைவர்தான்"- ரகுபதிக்கு மரிய வில்சன் பதிலடி

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "அப்பாவைக் காணோம் எனப் பேசுகிறீர்களே... மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், ... மேலும் பார்க்க

``என் அனுமதியின்றியே பாஜக தலைவர்கள் என் புகைப்படத்தை வெளியிட்டார்கள்" - சோனம் வான்சுக்

மத்திய அரசைக் கண்டித்து சிஜேபி முன்னெடுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக். அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு... மேலும் பார்க்க

அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி... அமெரிக்காவும் சரி... இப்போது வரை சளைத்ததாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன. ஈரான் ... மேலும் பார்க்க

2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினர்களா... மேலும் பார்க்க

"ஆடிப்பெருக்கு அப்போ தண்ணி எப்படி வந்தது? கர்நாடக அரசு நமக்கு.!" - சௌமியா அன்புமணி உரை

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய சௌமியா அன்புமணி, " தமிழ்நாட்டிற்கு உரிய 175 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு அட்டவணைப்போட்டு... மேலும் பார்க்க

"தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது எதிர்ப்பதற்கு?" - அமைச்சர் ரமேஷ் கிண்டல்

த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று முழுதாக மூன்று மாதங்கள் முடியவில்லை. அதற்குள்ளாக பல்வேறு துறை சார்ந்த சர்ச்சைகளும் சலங்கை கட்டி ஆடுகின்றன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் நடப... மேலும் பார்க்க