செய்திகள் :

"அந்தச் சமயத்திலிருந்து அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்" - சூர்யா கூறிவது என்ன?

post image

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

'விஸ்வநாத் & சன்ஸ்' டீம்
'விஸ்வநாத் & சன்ஸ்' டீம்

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, வெங்கி அத்லூரி ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த நேர்காணலில் பேசிய சூர்யா, "என் நண்பர் குடும்பத்தில் ஒரு கல்யாணம். அவர்களது குடும்பம் மினிஸ்டர் ஒருவருக்கு நெருக்கம். என் நண்பர் மினிஸ்டருக்கு பத்திரிக்கை வைக்க செல்லும்போது நானும் அவனுடன் சென்றேன்.

அப்போது என் நண்பரிடம் அவர், 'இந்தப் பையன் யார்?' எனக் கேட்டார். அதற்கு அவன், 'சிவக்குமார் சார் பையன்' என்று சொல்ல அவர், 'ஓ சிவக்குமார் சார் பையனா? என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டார்.

அப்போதுதான் நான் நடிக்க ஆரம்பித்த சமயம். 'பார்ப்பதற்கு சிவகுமார் சார் மாதிரியே இருக்கிறீர்கள். அவர் செய்ததைத்தானே நீங்களும் செய்யப்போகிறீர்கள். அவரை மாதிரியே நடிப்பீர்கள். அவருடைய பாவனைகள் எல்லாம் அப்படியே உங்களுக்கும் இருக்கும். இன்னொரு தலைமுறையும் அப்படியே உருவாகிறது" என்ற தொனியில் அந்த மினிஸ்டர் சொன்னார்.

சூர்யா
சூர்யா

அந்தச் சமயத்தில் இருந்து நான் அப்பாவின் படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அவரைப் போல் நடிப்பதையோ, அவர் செய்ததையோ நான் செய்ய விரும்பவில்லை. இந்தச் சம்பவம்தான் என்னைத் தூண்டியது. அதிலிருந்துதான் எனக்கான பாதையை நான் உருவாக்கிக்கொண்டேன்" என்று பேசியிருக்கிறார்.

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

நடிகர் சியான் விக்ரம், 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ... மேலும் பார்க்க

Karnataka SIR: "வாக்குரிமை நீக்கப்பட்ட வாக்காளர்களில் நானும் ஒருவன்" - வீடியோ வெளியிட்ட பிரகாஷ் ராஜ்

கர்நாடகாவில் தற்போது சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிரு... மேலும் பார்க்க

"அந்தப் படம் வந்தப்ப என்ன படிச்சுட்டிருந்தீங்க?"- சூர்யாவின் கேள்விக்கு மமிதா பதில்; கலாய்த்த ராதிகா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

இம்சை அரசன் 23-ம் புலிகேசி : அரியணையில் ஒரு கோமாளி! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 14

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 14அரியணையில் ஒரு கோமாளி!சோழபுர மன்னன் 23-ம் புலிகேசியைப் பிடித்த... மேலும் பார்க்க

Brothers & Sisters: "என் மனைவியே இந்த சீரிஸ் பார்க்கமாட்டேங்குறாங்க!" - போஸ் வெங்கட் பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும... மேலும் பார்க்க

"அவரது கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு..!"- மமிதா குறித்து சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கி... மேலும் பார்க்க