செய்திகள் :

"அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர்" - மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

post image

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மதிலுகள்', 'விதேயன்' ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி
அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், "என்னுடைய அடுத்தப் படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கதை எழுதும்போது முதன்மை கதாபாத்திரத்திற்கு என் மனதில் மம்மூட்டி முகமே தோன்றியது.

அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானத் தேர்வு என்று நான் உணர்ந்தேன். என்னுடைய திரைப்படத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி
அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

நான் இதுவரை மற்ற நடிகர்களுடன் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை" என்று கூறியிருக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

``நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்தேன்!" - நடிகர் திலீப் விடுதலையான வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ல் படப்பிடிப்பு முடித்து மாலை திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சம்பவம் அப்போது அதிர்வலையை ஏற்படு... மேலும் பார்க்க

"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப்

'த்ரிஷ்யம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், " பாலிவுட் மட்ட... மேலும் பார்க்க

Mohan lal:``எங்கள் அன்பான லாலுவுக்கு" - வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி | வைரலாகும் வீடியோ

71-வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வழங்கப்பட்டது. இந்த வி... மேலும் பார்க்க

Kalamkaval Review: கொடூர வில்லனாக மம்மூகா; கதையின் நாயகனாக விநாயகன் - க்ளிக் ஆகிறதா இந்த களம்காவல்?

கொலை செய்யும் சீரியல் கில்லரை காவல் அதிகாரி தண்டிப்பதே மம்மூட்டி, விநாயகன் நடித்திருக்கும் இந்த மல்லுவுட் படைப்பின் ஒன்லைன்.நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஸ்டீபன் தாஸ் (மம்மூட்டி)... மேலும் பார்க்க

Kalamkaval: "ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!"- நடிகர் மம்மூட்டி

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’.இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கி... மேலும் பார்க்க