செய்திகள் :

"அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று!" - உதயநிதி விமர்சனம் குறித்து திருமா

post image

த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'புஷ்பா' படத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், " எங்கள் அலுவலகத்திற்கு சோஃபா வந்தது ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அந்த நேரத்தில் நீங்கள் கேமராவை எடுத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டீர்கள். அவர் விசிகவை பற்றி சொல்லவில்லை. அதிமுகவில் உள்ள ஒரு அணியினரை சந்திக்க போகும்போது நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன்" என கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், " கடந்த அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களை இந்த அரசும் இடை நிறுத்தாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்கிற உறுதியை அளித்திருக்கிறார்.

மகளிர் உதவித்தொகை வரவு சற்று தள்ளிவைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றாலும் அது வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருப்பதால் கட்டாயம் அது நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நடைமுறைப்படுத்துவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தவிர "த.வெ.கவுடன் பேரம் பேசுவதற்காகத் தான் விசிக காலம் தாழ்த்தியது என்று விமர்சித்தார்கள். முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு: அமெரிக்காவிற்கு 'ஈரான்' பிரச்னை; சீனாவிற்கு 'தைவான்' பிரச்னை

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் சென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு ட்ரம்ப், சீனா சென்றிருந்தார். அதன் பிறகு, இப்போது தனது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சீனா சென்ற... மேலும் பார்க்க

'அதிமுகவுக்கு மினிமம் 5 அமைச்சர்கள்!' - டிமாண்ட் ஏற்றும் வேலுமணி டீம்; இறுதிக்கட்ட ஆலோசனையில் விஜய்?

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையி... மேலும் பார்க்க

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' - எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது..."- ஸ்டாலின் கண்டனம்

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவ... மேலும் பார்க்க

`மிரட்டிய எடப்பாடி; தனித்துச் சென்ற வேலுமணி டு லிஸ்ட் எடுக்கும் உதயநிதி.!' | கழுகார் அப்டேட்ஸ்

தனித்துச் சென்ற வேலுமணி!""மிரட்டிய எடப்பாடி...அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழிய... மேலும் பார்க்க

திமுக: ``தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" - ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருப... மேலும் பார்க்க