செய்திகள் :

"அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள்" - கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

post image

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு, எம்.பி விஜய்வசந்த், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை தேவயானி, "கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள்கூடி ஒற்றுமையாக பொங்கலிடும் இந்த காட்சி மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற காட்சியை நான் இதற்கு முன் கண்டதில்லை. அதற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. கடவுளின் அருள் இருந்தால்தான் இதுபோன்று நடக்கும். பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் ஒரு அருமையான விழா. பொங்கலன்று சூரியனை வணங்குகிறோம். இயற்கைக்கு நன்றி சொல்கிறோம். கூட இருக்கும் பிராணிகளுக்கு நன்றிசொல்லி வணங்குகிறோம். அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள். நான்கு நாட்கள் விடுமுறையில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்றார். மேலும், ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 'மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு...' என்ற பாடலையும் தேவயானி மேடையில் பாடினார்.

பொங்கல் விழாவில் நடிகை தேவயானி

இதில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "தமிழர்களுடைய பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், சாமானிய மக்களும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக ரொக்கப் பணமாக 3000 ரூபாய் கொடுத்துள்ளார். சாமானிய வீட்டு ஏழை பெண்கள் இலவச மகளிர் பேருந்து எப்போது வரும் என்று கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்து  ஆண்டுக்கு 3760 கோடி ரூபாயை முதலமைச்சர் அள்ளிக் கொடுத்துள்ளார். ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார்.

கடற்கரையில் நடைபெற்ற பொங்கல் விழா

பட்டப்படிப்பு படிக்க மாதம் 1000 ரூபாய் கொடுக்கின்ற நம்முடைய முதல்வர் சாமானிய ஏழை மக்களை பற்றி சிந்தித்து செயல்பட்டதனுடைய விளைவு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் 60  சதவிகிதம் பேர் பட்டம் படித்திருக்கின்றார்கள். திராவிட சமத்துவ மாடல் தான் இவ்வளவு பெரிய வெற்றியை நமக்கு தந்திருக்கின்றது. நம் முதல்வர் சாமானிய மக்களை பற்றி சிந்திக்கின்றார். ஏழைகளைப் பற்றி சிந்திக்கின்றார். ஒரே கையெழுத்தில் 6800 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் முதல்வர். ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள்தான். விவசாயி சேற்றில் காலை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது" என்றார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க