செய்திகள் :

"அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை; வன்னிய மக்களை வைத்து..!"- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்

post image

"பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்"- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார்.

சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

``எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ராமதாஸ்தான் எனக்கு கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7ஆம் முறை எம்எல்ஏ ஆக்கியவர் ராமதாஸ்.

எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணயம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன். அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்.

ராமதாஸை ஏற்ற பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. நிறுவனர் ராமதாஸ் உடன் நான் இருந்ததால் அன்புமணி என்னை துரோகி, சாக்கடை என்று கூறினார். எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணையம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன்.

அன்பு மணி- எம்எல்ஏ அருள்
அன்பு மணி- எம்எல்ஏ அருள்

திமுக, அதிமுக, தவெக, தமிழக வாழ்வுரிமை கட்சி என அனைத்து கட்சிகளில் இருந்தும் எங்களுக்கு அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. ஒரு மாதத்திற்கு பின் ஆடி மாதம் முடிந்ததும் எந்த முடிவாக இருந்தாலும் தெரிவிப்போம். பாமகவில் அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இனி எந்த பாதை என்பதை ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

'40 நிமிட அமைச்சரவை கூட்டம்; கடுமையாக எச்சரித்த முதல்வர் விஜய்!' - ஜெர்க் ஆன அமைச்சர்கள்!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு சில கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் கிசுகிச... மேலும் பார்க்க

பழநி : "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.!"- நிர்மல் குமார் பகீர்

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை.16) நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "இன்று நடைபெற்றது பட்ஜெட்... மேலும் பார்க்க

விழுப்புரம்: குப்பைக் கிடங்காக மாறிய திண்டிவனம் மேம்பாலம்! - கண்டுகொள்ளாத நகராட்சி; தீர்வு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம... மேலும் பார்க்க

’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண... மேலும் பார்க்க

"உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா?" - மம்தா பானர்ஜி தாக்கு

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சொந்த தொகுதியிலேயே வெற்றியைத் தரவில்லை மக்கள். ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்!

வருகிற ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.இந்தக் கூட்டத்தொடர்களை அவை தலைவர்கள் வழிநடத்துவார்கள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்.... மேலும் பார்க்க