'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' - கண்டுகொள்ளாத அரசு?
"அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம்" - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் சின்மயி
Chhaava திரைப்படம் பிரிவினைவாதத்தைத் தூண்டும் திரைப்படம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்வாதி சதுர்வேதி பதிவு
இந்த நிலையில், இந்தி தொலைக்காட்சி சேனலின் விஜே ஸ்வாதி சதுர்வேதி ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானின் இந்தக் கருத்து மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவரது தெய்வீக "மா துஜே சலாம்" வந்ததாரத்தைப் பாடவோ... குறைந்தபட்சம் முணுமுணுக்கவோ அரைமணி நேரம் கெஞ்சினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
தங்களுடைய மிகப்பெரிய ஹிட் குறித்து கலைஞர்கள் எப்போதும் இப்படி அடம்பிடிக்கமாட்டார்கள். அதனால், நான் வருத்தப்பட்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சின்மயி பதிவு
இதற்கு மறுப்பு தெரிவித்து பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்...
"நவம்பர் 23, 2025 அன்று, புனேவில் நடந்த ஆர் கே லட்சுமணன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சியில் எங்களுடன் சேர்ந்து கோஷமிட்ட கூட்டத்தினரிடையே ஏ ஆர் ரஹ்மானும் நாங்கள் அனைவரும் வந்தே மாதரம் பாடினோம்.
Bainjal-ல் கிட்டத்தட்ட அனைத்து இசை நிகழ்ச்சியிலும் அவர் மா துஜே சலாம் பாடுகிறார் . இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் இது தெரியும்.
ஒருவேளை அவர் தனது குரல் சிறப்பாக இல்லை என்றோ... நீங்கள் அவரை நேர்காணல் செய்த அன்று அவருக்கு பாட விரும்பவில்லை என்றோ பாடாமல் இருந்திருக்கலாம்" என்று பதிலளித்துள்ளார்.
A R Rahman and all us sang Vande Mataram to a crowd that chanted with us on November 23 2025 in Pune at the R K Laxman memorial award concert.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 17, 2026
He sings Maa Tujhe Salaam at almost every concert @bainjal - everyone who has attended the concerts knows this.
Maybe he felt his voice… https://t.co/lmbnLObVlh















