புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த டிஐஜி
அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு
கரூா் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச.31-ஆம்தேதி பகல் பத்து உற்ஸவத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா்.
இதில், வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் அபயபிரதான ரெங்கநாதா் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட அபயபிரதான ரெங்கநாதா் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினாா். இந்நிகழச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து இராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.