செய்திகள் :

"அப்பா, என்னைக் காப்பாத்துங்க; இவங்க என்ன கொன்றுவாங்க" - குழந்தை பெற்ற பெண் மருத்துவமனையில் இறப்பு

post image

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கல்பனா மிஸ்ரா(25) என்ற பெண் பிரசவத்திற்ககாகச் சேர்க்கப்பட்டு இருந்தார்.

ஹட்வா என்ற இடத்தைச் சேர்ந்த கல்பனாவிற்கு இரவு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு கல்பனாவின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரது தந்தை ராம்சரண் மிஸ்ரா, கல்பனாவைப் பரிசோதிக்கவும், அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மருத்துவர்களிடம் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்குப் போதுமான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் கல்பனா பரிதாபமாகச் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

உறவினர்களிடம் ஓட கல்பனா முயற்சி
உறவினர்களிடம் ஓட கல்பனா முயற்சி

அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தது. இது குறித்து கல்பனாவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் கேட்டபோது, கல்பனா கர்ப்ப காலத்தில் தேவையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், அவரது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு திடீரென அதிகரித்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். மரணம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா கூறுகையில், ''கல்பனா பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையில் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. கல்பனாவின் குடும்பம் தவறு செய்துவிட்டது.

ஒரு கர்ப்பிணிப் பெண் குறைந்தபட்சம் எட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கல்பனாவின் ஆவணங்களைப் பார்க்கும்போது, ​​​​அவர் இரண்டு முறை மட்டுமே பரிசோதித்து இருக்கிறார்.

இரண்டு பரிசோதனைகளும் தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டது. உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இரண்டு நர்சிங் அதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் யார் பொறுப்பு என்று கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள் சிகிச்சையில் எந்த வித தவறும் செய்யவில்லை," என்று அவர் கூறினார்.

கல்பனா மிஸ்ரா இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே, தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி தனது குடும்பத்தினரிடம் கெஞ்சினார்.

"அப்பா இதுபோன்ற சிகிச்சை தொடர்ந்தால், இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று தனது தந்தையிடம் கல்பனா கெஞ்சிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் "நான் பிழைக்க மாட்டேன், தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள், என் உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று கல்பனா கூறுகிறார்.

கல்பனா இறப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு அவர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றுகிறது. கல்பனா தனது உறவினர்களிடம் செல்ல முயன்றார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை வெளியேற விடாமல் தடுக்க முயற்சித்தனர். ஆனாலும் திரும்பத் திரும்ப தனது உறவினர்களிடம் செல்ல கல்பனா முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் கல்பனா இறந்து போனார்.

தாராபுரம்: புழுதிப்புயலுக்குள் சீறிப்பாய்ந்த கார்கள் - களைகட்டிய கார் பந்தயம் | Photo Album

திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கா... மேலும் பார்க்க

வீட்டின் அகலம் வெறும் 72 செ.மீ… ஆனால் வீட்டுக்குள் அத்தனை வசதிகளா! ஒரு Home Tour போலாமா?

இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் வெறும் 72 செ.மீ இடத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? போலந்தின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), உலகின் மிகக் ... மேலும் பார்க்க

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?

டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை ... மேலும் பார்க்க

"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு

சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில... மேலும் பார்க்க

"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலைய... மேலும் பார்க்க