செய்திகள் :

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

post image

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால், NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள். அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5,000 ரூபாயை அறிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ்

அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும், துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல், அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம். தி.மு.க-வுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டன்ட்டைக் காட்டுகிறது" என்றார்.

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க

`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?

மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நயினார் நாக... மேலும் பார்க்க

ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்

உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் ... மேலும் பார்க்க

`தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான்' திமுக மாவட்ட செயலாளரின் வாக்குறுதி; குழப்பத்தில் நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி, எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற ப... மேலும் பார்க்க

"நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்"- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகள... மேலும் பார்க்க