பாராமதி விமான நிலையம்: அடிக்கடி VIP-க்கள் வந்து சென்றாலும் முறையான விமான வழித்தட...
அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாகச் சாடும் அமெரிக்கா
இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான், உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயம் - 'இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்'.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவைத் தாண்டிய சந்தைக்கு எளிதான மட்டுமல்லாமல்... வரி இல்லாத சந்தைக்கும் இந்தியாவை அழைத்துச் செல்கிறது.
இது அமெரிக்காவின் கண்ணை உறுத்தாமலா இருந்திருக்கும்?

ஆம்... உறுத்தியிருக்கிறதுதான். அதனால்தான், அமெரிக்காவின் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் உக்ரைனைக் காட்டி ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார்.
"ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறோம்.
ஆனால், கடந்த வாரம் என்ன நடந்தது? ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் போரினால் ஐரோப்பிய நாடுகள்தாம் போர் முனையில் உள்ளன.
இந்தியா தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்களை வாங்குகிறது. ஐரோப்ப நாடுகளோ சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை வாங்குகின்றன. ஆக, ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்கு எதிரான போர்களுக்கு அவர்களே நிதியளிக்கின்றன.
'வர்த்தகம்'தான் மிக முக்கியம்
நாங்கள் இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்தோம். எங்களுடன் இணைந்து இந்த வரியைப் போட, ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த ஒப்பந்தம்தான் இதற்குக் காரணம்.
ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொரு முறை உக்ரைன் மக்களைப் பற்றி பேசும்போதும், அவர்கள் அந்த மக்களைத் தாண்டி வர்த்தகத்தை முன்னிறுத்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் போரை நிறுத்துவதை விட, வர்த்தகம்தான் மிக முக்கியம்" என்று பேசியுள்ளார்.















