செய்திகள் :

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் உண்டியல் பணமும் திருட்டு; வைரலாகும் வீடியோ

post image

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சமூக ஊடகங்களில் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு இது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பத்ரிநாத் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மற்றும் ரொக்க பணத்தில் கையாடல் செய்வது மற்றும் முறைகேடுகள் நடப்பதாக செய்தி வெளியானது.

அதோடு 'பைரவ் சேனா' என்ற இந்து அமைப்பின் நிறுவனத் தலைவரான சந்தீப் கத்ரி என்பவரும் கோயில் உண்டியல் மற்றும் நன்கொடையில் முறைகேடு நடப்பதாக கோயில் கமிட்டிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

கோயில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹன் சிங் ரங்கட்டிற்கு நேரடியாக அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், காணிக்கை அறையில் நடந்த துல்லியமான முறைகேடுகளைக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட சில ஊழியர்களைக் குறிவைத்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

ஜூலை 3 அன்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், பத்ரிநாத் தாமில் காணிக்கை எண்ணும் பணியின் போது திருட்டு நடந்ததாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கடிதத்தை அனுப்பியவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் தலைவருடைய தனிச் செயலாளர் என்று கூறப்படும் ஒரு நபர், பக்தர்களின் காணிக்கைப் பணத்தைத் திருடியதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த முழு விவகாரத்திலும் எவ்வித பாரபட்சமுமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் (BKTC) தலைவர் ஹேமந்த் திவேதி இது குறித்து கூறுகையில், இந்த விவகாரத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி, உண்மைகளின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது என்றார். இந்த விசாரணைக்குப் பிறகு ஏதேனும் ஊழியர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், விதிகளின்படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

சமூக ஊடகப் புகார்களைத் தானாக முன்வந்து கவனித்த கோயில் குழு, லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக அணுகுவதாகவும், 24 மணி நேரத்திற்குள் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் புகார்கள் குறித்து கோயில் நிர்வாகம் மிகுந்த தீவிரத்துடன் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

கேதார்நாத், பத்ரிநாத் கோயில்கள்

கோயில் கமிட்டி இது குறித்து கூறுகையில், ''பத்ரிநாத் தாமில் பக்தர்களின் காணிக்கைகளை எண்ணுவதற்கு முறையான மற்றும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வங்கி ஊழியர்கள், கோயில் கமிட்டியினர், அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்படுகிறது'' என்றது.

அடுத்தடுத்து வரும் உண்டியல் புகார் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க