செய்திகள் :

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: "கழிவறையில் மறைத்து வைப்போம்" - விசாரணையில் பகீர் தகவல்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது அதனைத் திருடியதாக உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து கைதானவர்களில் ஒருவரான அவினாஷ் சுக்லா என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கோடிக்கணக்கான ரூபாயைத் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதோடு கோயில் உண்டியல் பணம் எண்ணுவதில் கோயில் டிரஸ்ட் பொருளாளர் அனில் மிஸ்ரா முங்கியப் பங்கு வகித்ததாகவும் சுக்லா தெரிவித்தார். அனில் மிஸ்ரா மற்றும் கோயில் டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் ஆகிய இரண்டு பேரும் கடந்த வாரம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

அவினாஷ்
அவினாஷ்

சம்பத் ராயிக்கு மிகவும் நெருக்கமான தின்னு யாதவ், உண்டியல் பணம் எண்ணும் பொறுப்பாளர் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா, உண்டியல் எண்ணும் ஊழியர்கள் அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, மணீஷ் குமார், ராம் சங்கர், கருனேஷ் பாண்டே ஆகியோரிடமும் விசாரணை நடக்க இருக்கிறது.

அவினாஷ் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், உண்டியல் பணம் எண்ணும் அறையின் ஒரு சாவி தின்னு யாதவ்விடமும் மற்றொரு சாவி வங்கி ஊழியர்களிடமும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமாகவே உண்டியல் பணம் திருடப்பட்டதாக அவர் கூறினார்.

கண்காணிப்பு கேமரா இருந்ததால் அதில் சிக்காமல் இருக்க ஒருவர் பணத்தை எடுத்துக்கொள்ள, மற்றவர்கள் அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம்போல மறைப்பை உருவாக்கினர் என்றும் தெரிவித்துள்ளார்.

கோயில் வளாகத்திற்குள் பொருத்தப்பட்ட கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டதாகவும், ஆனால் கண்காணிப்பு ஊழியர்கள் தங்களின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கவில்லை என்றும் அவினாஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட பணத்தை முதலில் அங்குள்ள கழிவறையில் மறைத்து வைப்போம் என்றும், அதன் பிறகு சரியான நேரம் அமையும் போது அதனை வெளியில் எடுத்துச்செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருடிய பணத்தில் வீடு மற்றும் நிலம் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருடிய பணத்தில் ரூ.58 லட்சம் அவினாஷ் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க