செய்திகள் :

அரசுப் பள்ளியில் பயின்று 440 மதிப்பெண்கள்; நீட் மறுதேர்வு பயத்தில் விபரீத முடிவெடுத்த சேலம் மாணவி

post image

சேலம் மாவட்டம் எருமபாளையத்தைச் சேர்ந்த சேகர் - புவனேஸ்வரி தம்பதியரின் மகள்19 வயது கோபிகா. சேலம் கோட்டை அரசு பள்ளியில் பயின்ற இவர், 12- ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 440 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய இவரால் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை. நாளை நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். இந்த நிலையில், மறுதேர்வை எதிர்கொள்ள தைரியம் இல்லை எனக்கூறி தவறான முடிவான தற்கொலை செய்து நேற்று மதியம் உயிரை மாய்த்திருக்கிறார். கோபிகா வின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோபிகா

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மாணவி கோபிகாவின் தந்தை சேகர், " விநாயகா மிஷன்ஸ் கல்லூரியில் நடைபெறவிருந்த நீட் மறுதேர்வை எழுதுவதற்காக மகள் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் நேரில் சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

கடந்த முறை நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும், இந்த முறை கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் மாற்று கல்வி வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். ஆனால் அதற்குள் இந்த முடிவை எடுத்துவிட்டார்" என வேதனை தெரிவித்தார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

தற்கொலை தடுப்பு மையம்

பீகார்: கூட்டுப் பாலியல் கொடுமை; இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தோட்டா... கும்பல் அட்டூழியம்!

பீகார் மாநிலம், பெகுசராய் என்ற இடத்தில் தனது கணவருடன் வசித்து வசித்து வந்த 26 வயது பெண்ணின் வீட்டிற்குள் 6 பேர் கொண்ட கும்பல் இரவு 11மணிக்கு திடீரென அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் வீட்டில் இருந்த அ... மேலும் பார்க்க

திருச்சி: 'மாணவர்களுக்கு இடைஞ்சல்; பெண்களுக்குப் பயம்' - டாஸ்மாக் பாரை மூட கோரி போராட்டம்

திருச்சி மாநகரம், டி.வி.எஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக போ... மேலும் பார்க்க

திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 45). இவர், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது:42) . இவர்களுக்... மேலும் பார்க்க

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இள... மேலும் பார்க்க

திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திரு... மேலும் பார்க்க

அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி; தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரைத் தாக்கிய புதிய தமிழகம் நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில்திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாட... மேலும் பார்க்க