செய்திகள் :

"அரசு ஊழியர்களை கிரிமினல் போல நடத்துவதா?" - ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

post image

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாரத் மாதா கி ஜெ என்றால் பாரத அன்னையை வணங்குவோம் என்று அர்த்தம். இதில் மதவெறி இல்லை. பாரத் மாதா கி ஜெ என நாட்டிற்காகப் போராடிய லட்சக்கணக்கான தொண்டர்களை அமைச்சர் சேகர்பாபு கொச்சைப்படுத்துகிறார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

நாட்டை தாயாக வணங்குவது நமது நாட்டின் பாரம்பர்யம். பாரத் மாதா கி ஜெ பாஜக, ஆர்எஸ்எஸ் கோஷமல்ல‌. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷமும் அதுதான். இதற்காக காங்கிரஸ் கட்சியை திமுக கண்டிக்குமா? சேகர் பாபுவின் குறுகிய எண்ணமும், பிரிவினைவாத நோக்கமும் வார்த்தையாக வெளிப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் தன் பொறுப்பை மத்திய அரசு மற்றும் பெற்றோர்கள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இளைஞர்கள் மிக மோசமான பாதைக்குச் செல்வதற்கு அரசும் ஒரு காரணம். தன் தோல்வி வெளியே தெரிந்துவிடும் என்பதால் முதலமைச்சர் மத்திய அரசு மீது பழி போடுகிறார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

இதற்கு அரசின் தோல்விதான் காரணம். இதற்காக முதலமைச்சர் முழுப் பொறுப்பேற்க வேண்டும். டாஸ்மாக் போதை எல்லாம் போதை இல்லையா? டாஸ்மாக்கில் டார்கெட் வைத்து விற்பனை செய்வது போதையை ஊக்குவிப்பது இல்லையா?

தமிழ்நாடு தொடர்ச்சியாகப் போராட்டக் களமாக மாறி வருகிறது. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேட்டு அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல கையாள்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் போராட்டம்
அரசு ஊழியர்கள் போராட்டம்

சாதாரண மக்கள், அரசு மீது கோபத்தில் உள்ளார்கள். அரசு ஊழியர்களுக்கு அதைவிட அதிக கோபம் உள்ளது. கோவை செம்மொழிப் பூங்காவை இன்னும் பார்க்கவில்லை. அதில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்றார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க