"காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!"- பாஜகவிலிருந்து விலகினா...
அரியலூர்: காணாமல் போன 3 வயது சிறுமி - 5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!
அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சிக்குட்பட்ட சிலுப்பனுர் கிராமத்தில் வசிப்பவர்கள் மணிமாறன்-சரிதா தம்பதி. இவர்களது மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா. நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை மதியம் சுமார் 4 மணியிலிருந்து காணவில்லை என சொல்கிறார்கள்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பதறியபடி சிறுமியை தேடி வந்துள்ளனர். இதில் இரவு பத்து மணியளவில் குடியிருப்புக்கு அருகில் உள்ள புதர் மண்டிய குளத்தில் சிறுமி சடலமாக கிடப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைப்பார்த்த அவரின் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நேற்று வழக்கம் போல் அங்கன்வாடி மையத்திற்கு சென்று வந்துள்ளார் சிறுமி நிவிஷ்னா. மதிய உணவிற்கு பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமியை அவரது அம்மா குளிக்க வைத்து அனுப்பியுள்ளார். பின்னர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போக... பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தூத்தூர் போலீஸார் உயிரிழந்த மூன்று வயது குழந்தை நிவிஷ்ணாவின் உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

















