செய்திகள் :

"அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.!" - த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை

post image

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு அரசியல் வட்டாரத்தினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Trisha
Trisha

திமுக எம்.பி கனிமொழி, ''ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல்." என கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், "அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை.

எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார்.

மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார்.

Trisha Notice
Trisha Notice

எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"விஜய் சாருக்காக நான் வெரி ஃபர்ஸ்ட் எழுதின ஸ்கிரிப்ட் இன்னும் இருக்கு!" - ATM இயக்குநர் பரதன் பேட்டி

இயக்குநர் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அழகிய தமிழ் மகன்'. நம் சினிமா விகடன் ரீவைண்ட் தொடருக்காக இந்த வாரம் 'அழகிய தமிழ் மகன்' படத்தின் சுவாரஸ்யக் கதைகளைக... மேலும் பார்க்க

Jana Nayagan: படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாதா?! என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர்?

விஜய் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள்.படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.பிறகு சென்சார் சான்றி... மேலும் பார்க்க

Ajith Kumar: "அஜித் சாருடன் அடுத்த படம் எப்போது?" - இயக்குநர் 'சிறுத்தை' சிவா கொடுத்த அப்டேட்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவில், 'பறக்கவைக்கும் ராஜாளி' விருதை வென்ற பைக் ரேசர் மாயாவைப் பாராட்டி இயக்குநர் சிவா பேசினார். Ananda Vikatan Nambikkai Awards"மாயா ஒருமுறை சொன்னார்கள், 'எ... மேலும் பார்க்க

'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, ``முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், ... மேலும் பார்க்க

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட்.'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்... மேலும் பார்க்க

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?

ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இ... மேலும் பார்க்க