Akshay Kumar: "நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன்" ...
Jana Nayagan: படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாதா?! என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர்?
விஜய் நடித்திருக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள்.
படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.
பிறகு சென்சார் சான்றிதழ் பிரச்னைக்காக நீதிமன்றத்தை நாடியது 'ஜன நாயகன்' படக்குழு. பிறகு, அந்த வழக்கையும் வாபஸ் பெற்றது.

இப்போது படத்தை மீண்டும் மறுதணிக்கைக்கு படக்குழுவினர் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கனடா நாட்டின் விநியோகஸ்தரான 'யோர்க் சினிமாஸ்', 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக வெளியாகாது எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை பதிவு இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த அறிக்கையில், "'ஜனநாயகன்' ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களிடம் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் பணி இன்னும் முடியவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் திரையரங்குகளைத் தொடர்புகொண்டு விரைவில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டவுடன் முன்னுரிமை பதிவு வசதி வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

படக்குழுவிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு இப்படியான தகவல் சொல்லப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகிறார்கள்.
படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















