செய்திகள் :

'அறிவாலய வசை, உடைந்து போன மனம்!' - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்

post image

மதிமுக, திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பேச்சாளராக முக்கியப் பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ்வின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் பேசியவை இங்கே.

அவர் கூறியதாவது, ``தம்பி விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து `நீயும் முதல்வன் ஆகலாம்’ புத்தகத்தை கொடுத்து தவெகவில் இணைந்தேன். ஆறு ஆண்டுகளாக எந்தக் கட்சியிலும் இல்லாமல் பெரியார், அண்ணாவின் லட்சியங்களை பேசிக் கொண்டிருந்தேன். விஜய்யை என்னை சந்தித்தவுடனேயே, 'நான் உங்களின் ரசிகன்!' என்றார்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

வசைமாரி பொழிந்தார்கள்

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால், அறிவாலயத்திலிருந்து வசைமாரி பொழிந்தார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாட வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு என்னிடம் தேதி வாங்கியிருந்தார்.

என் மனம் உடைந்து போனது

கடந்த 28 ஆம் தேதி அந்த நிகழ்வில் பேசியிருந்தேன். அந்த நிகழ்வில் கரு.பழனிப்பன் என்னை நக்கல் செய்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு சுப.வீ என்னை திமுக மேடையில் வசைபாடினார். என் மனம் உடைந்து போனது.

எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடம் சென்று நின்றது இல்லை. ஆனால், என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்து என் வயிற்றில் அடித்தார்கள். விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னை மிரட்டுகிறார்கள்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

புதிதாக தொடங்கிய ஒரு அமைப்புக்கு பெரியாரையும் அம்பேத்கரையும் விஜய் கொள்கைத் தலைவராக முன்னிறுத்துகிறார். குலக்கல்வி சட்டத்தை எதிர்த்த இந்தியாவில் விடுதலைக்காக போராடிய காமராஜரையும் தலைவராக வைத்திருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக கொண்ட இயக்கம் தவெக.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பாசறை நடத்த வேண்டும் என விஜய்யிடம் கூறினேன்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டு பிரிவுகளிடையே கலவரத்தை தூண்ட முனைகிறார்கள். அதில் விஜய் மௌனமாக இருப்பதே நல்லதுதானே. விஜய்யிடம் நீங்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கிறார்களே என கேட்டேன். அதற்கு விஜய், 'இங்கே ஆட்சி புரிபவர்களை வலுவாக எதிர்க்க வேண்டும். தேவை வரும்போது அவர்களையும் வலுவாக எதிர்ப்போம்' என்றார்.’ என முடித்துக்கொண்டார்.

Putin: "காந்தி உலகம் முழுமைக்குமான சிந்தனையாளர்" - புதின் கைப்பட எழுதிய குறிப்பு!

23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வருகையின்போது ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு மர... மேலும் பார்க்க

``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன!" - மோடி

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.அவரின் வருகையைத் தொ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை" - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்!

தமிழகமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூடாகிப் போயிருந்த நேரத்தில், திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை.... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்; நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்! | Album

ஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சரா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `நீதித்துறை, இந்துத்துவா, திமுக - ஓரணியில் நின்று முறியடிப்போம்' - சீமான் அறிக்கை

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க