Putin Visit India: `சிவப்புக் கம்பள வரவேற்பு, பகவத் கீதை பரிசு, 23-வது உச்சி மாந...
Latvia: `ஆண்கள் தட்டுப்பாடு' - துணையை தேடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பெண்கள்
இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்–பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடிக்கொண்டும் இருக்கின்றனர்.
ஆனால் ஐரோப்பாவில் உள்ள லாட்வியா என்ற நாட்டில் ஆண்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் ஆண் துணை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
சொந்த நாட்டில் துணை கிடைக்காமல் வெளிநாடுகளிலாவது துணை கிடைக்குமா என்று தேடி செல்கின்றனர். லாட்வியா நாட்டில் பணிசெய்யும் இடங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் இருக்கின்றனர்.

இது குறித்து அந்நாட்டைச் சேர்ந்த டேனியா கூறுகையில், “நான் வேலை செய்யும் இடத்தில் பெரும்பாலும் பெண்களையே பார்க்க முடிகிறது. அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆண்களும் இருந்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும்,” என்றார்.
அவரது தோழி ஜனா இதை பற்றி கூறுகையில், “இங்குள்ள பெண்கள் தங்களது துணையை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்,” என்றார்.
சில பெண்கள் வீட்டில் ஆண்களால் மட்டுமே செய்யக்கூடிய பிளம்பிங், வயரிங் போன்ற வீட்டு வேலைகளுக்காக ஆண்களை மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்துக்கொள்கின்றனர். இதற்காக சில ஏஜென்சிகளும் செயல்படுகின்றன. வாடகை கணவர்களும் ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் கிடைக்கின்றனர்.

அவர்களையும் பெண்கள் மணிக்கணக்கிலேயே வாடகைக்கு எடுத்து வருகின்றனர். அவர்களை பயன்படுத்தி வீட்டு வேலையைச் செய்ய சொல்வதோடு, தங்களுடைய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
லாட்வியாவில் ஆண்களின் ஆயுட்காலம் குறைவாகவே உள்ளது. இங்கு 31 சதவீதம் ஆண்கள் புகைப்பிடிக்கின்றனர். இதனால் அவர்கள் குறைந்த வயதிலேயே இறக்க நேரிடுகிறது. அதே சமயம், ஆண்கள் அதிக உடல் எடையுடனும் இருக்கின்றனர். இங்கு 65 வயதை கடந்த பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனர்.
கணவர்களை வாடகைக்கு எடுப்பது லாட்வியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் 2022ம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. இங்கிலாந்தில் வாடகை கணவர்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றனர்.

















