செய்திகள் :

"அவர்தான் நான் பெயிலாக காரணம்" - ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் ஆண்டு வரை படித்ததற்கு டி.சி சான்றிதழ் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே சான்றிதழுக்கான கட்டணத்துடன் விண்ணப்பிக்கும்படி பள்ளி முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

மேலும் தான் 2023ம் ஆண்டு பள்ளியில் பெயிலாவதற்குக் குறிப்பிட்ட வகுப்பு ஆசிரியர்தான் காரணம் என்று கூறினார். இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் முதல்வர் அறைக்கு வந்தார். அவரிடமும் அந்த மாணவர் இது தொடர்பாக வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை வயிற்றில் குத்தினார்.

இதனைத் தடுக்க முதல்வரும், பள்ளி ஊழியரும் முயன்றனர். ஆனால் அவர்களையும் மாணவன் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

கத்தியால் குத்திய மாணவன்
கத்தியால் குத்திய மாணவன்

கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆசிரியர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாணவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் விவேக் ஜாதவ் கூறுகையில், "சத்ரபதி சாம்பாஜி நகரில், 2023-ஆம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்து அடுத்த ஆண்டு வகுப்பில் சேராத மாணவர் ஒருவர், லிட்டில் ப்ளவர் பள்ளிக்குச் சென்று தனது மாற்றுச் சான்றிதழை (TC) வழங்குமாறு கோரினார்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து அதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு முதல்வர் அவரிடம் கூறியபோது, ​​அந்த மாணவர் அதை மறுத்துவிட்டார். தான் தேர்வில் தோல்வியடைந்ததற்கும், அதன்பின் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கும் தனது 2023-ஆம் ஆண்டு வகுப்பு ஆசிரியரே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அந்த மாணவர் சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் முற்றிய நிலையில் பள்ளிக்குள்ளேயே அவரை கத்தியால் குத்தினார்'' அவர் தெரிவித்தார்.

கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் பெயர் விஷால் என்று தெரிய வந்துள்ளது. கத்தியால் குத்தப்பட்ட காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சி வைரலாகி இருக்கிறது.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க