செய்திகள் :

`அவளை பிடிக்கவில்லை' - மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவன்

post image

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பாலன்பூரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். இவர் தனது 26 வயது மனைவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறி காணவில்லை எனக்கூறி போலீஸில் புகார் செய்து இருந்தார். அவர் தனது மனைவியிடம் மொபைல் போன் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பெண்ணின் தந்தையும் தனியாக தனது மகளை காணவில்லை என்று கூறி புகார் செய்து இருந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் நிகேஷ் பட்டேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

பட்டேலிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை தெரிய வந்தது. அவர் தனது மனைவி மீதுள்ள வெறுப்பின் காரணமாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து சதி செய்து, மனைவியை விற்பனை செய்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

தனது மனைவியை தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டு விற்பனை செய்யப்பட்ட பெண்ணை மீட்டனர். மொத்தம் ரூ.1.50 லட்சத்திற்கு விலை பேசி ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு பட்டேல் தனது மனைவியை அருகில் உள்ள தராட் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

வெளியில் சென்று வரலாம் என்று கூறி பட்டேல் நண்பர்கள் இரண்டு பேர் ஆட்டோவில் அழைத்து சென்று அப்பெண்ணை விற்பனை செய்துள்ளனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் கே.பட்டேல் கூறுகையில், ''நிகேஷ் பட்டேல் தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் அல்லது தன்னை விட்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதோடு தான் இப்போது தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை தனது வீட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக தனது நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து தனது மனைவியை விற்பனை செய்ய நிகேஷ் பட்டேல் முடிவு செய்தார்.

இதையடுத்து நிகேஷ் பட்டேல் நண்பர்கள் இரண்டு பேர் தவறான காரணத்தை கூறி பாதிக்கப்பட்ட பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்றனர். அதில் ஒருவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அப்பெண்ணை தராட் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் விற்பனை செய்துவிட்டனர். அப்பெண்ணை வாங்கிய நபர், ஒருவாரமாக அப்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்" என்றார்.

அப்பெண்ணை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக நிகேஷ் பட்டேல் மற்றும் அவரது நண்பர்கள், அப்பெண்ணை வாங்கிய நபர்கள் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பெண் அணிந்திருந்த கம்மலை கழற்றி அதனையும் விற்பனை செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் நிகேஷ் பட்டேல் இதற்கு முன்பு இரண்டு திருமணமான பெண்களை தனது வலையில் சிக்க வைத்து அவர்களுடன் வீட்டை விட்டு ஓடியிருந்ததும் தெரிய வந்தது. தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை தனது வீட்டிற்கு கொண்டு வருவதற்காக தனது சொந்த மனைவியை விற்பனை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஆள் கடத்தல், கூட்டுப் பலாத்காரம், கொள்ளை, குற்றச்சதி போன்றவற்றின் கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மிது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க