செய்திகள் :

அஸெட் அலோகேஷன்: பணத்தைப் பல மடங்காங்கும் சீக்ரெட் - எப்படி திட்டமிடுவது எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

post image

உடல் ஆரோக்கியமாக இருக்க எப்படி பல்வேறு ஊட்டச் சத்துள்ள உணவு தேவைப்படுகிறதோ அதுபோலவே, நம் நிதிநிலை செழிப்பாக இருக்கப் பல்வேறு வகையான முதலீடுகள் கலந்த போர்ட்ஃபோலியோ அவசியமாகிறது. பலரும் இன்னமும் செய்யும் தவறு என்னவெனில், தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போடுவார்கள், அதேபோலத்தான் சிலர் ரியல் எஸ்டேட்டில் மட்டும் பணத்தைப் போடுவார்கள். சிலர் பங்குச் சந்தையில் மட்டும் முதலீடு செய்வார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஒரே ஒரு சொத்து வகையில் மட்டும் பணத்தைப் போடுவது நம் முதலீட்டுக்கு அதிக ரிஸ்க்கைக் கொண்டுவரும்.

ஏனெனில், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை போன்றவை பல்வேறு காரணிகளின் தாக்கத்தால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாகச் செயலாற்றும். இந்த வருடம் தங்கம் அதிக லாபம் கொடுத்தால், அடுத்த ஆண்டும் அப்படியே இருக்காது. பங்குச் சந்தையும் அப்படித்தான். ஏற்ற, இறக்கம் இருந்துகொண்டே இருக்கும். எனவே, ஒரே ஒரு சொத்துப் பிரிவில் மட்டும் பணத்தைப் போட்டால் நம்முடைய முதலீடு நமக்கு நஷ்டத்தைத் தருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதைத்தான் வாரன் பஃபெட் "எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்" என்று சொல்வார்.

பங்குச் சந்தை...

அதற்குத்தான், சொத்து ஒதுக்கீடு (Asset allocation) என்ற சிறந்த முதலீட்டு உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்து பிரிவுகளில் நம்முடைய பணத்தைப் பிரித்து முதலீடு செய்து கலவையான போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதுதான் நம் பணத்தைப் பல மடங்காக்கும் சீக்ரெட் ஆகும்.

வெவ்வேறு சொத்து வகுப்புகள் வெவ்வேறு சந்தை சூழ்நிலைகளில் வித்தியாசமாகச் செயல்படுவதால், முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம் ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதே அஸெட் அலொகேஷனின் நோக்கம். அஸெட் அலொகேஷன் எப்படி இருக்க வேண்டும், யார் எந்த சொத்து பிரிவில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், முதலீட்டில் லாபத்தை அதிகரித்து செல்வத்தைப் பெருக்குவது எப்படி என்பதையெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர நாணயம் விகடன், இன்டக்ரேட்டட் நிறுவனத்துடன் இணைந்து வரும் நவம்பர் 29-ம் தேதி சனிக்கிழமை ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலோகேஷன்!’ என்ற சிறப்பு நிகழ்ச்சியைத் திருவள்ளூரில் நடத்துகிறது.

அஸெட் அலோகேஷன்

இந்த நிகழ்ச்சியில், பொருளாதாரம், முதலீடு போன்றவற்றில் நிபுணத்துவமும் அனுபவமும் உள்ள சோம வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இன்டக்ரேட்டட் நிறுவனத்தின் சார்பாக நிபுணர்கள் எல்.சுதாகர், ஆர்.குருராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்..!

நிகழ்ச்சி நடக்கும் நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் இதோ:
நாள்: 29.11.2025 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 06.30 முதல் 08.30 வரை
இடம்: I.R.N.கல்யாண மண்டபம் A/c, J.N.ரோடு, (ஆயில் மில் அருகில்),
GRT ஜுவல்லரி எதிரில், திருவள்ளூர் - 602 001.


திருவள்ளூர் மக்களே... இதில் கலந்துகொண்டு உங்கள் செல்வத்தைப் பெருக்கும் சீக்ரெட்டை அறிந்துகொள்ளத் தயாராகுங்கள்.

For registration missed call to: 044 66802980 / 044 66802907
பதிவு செய்ய: https://bit.ly/integratedmf

நாணயம் விகடன் வழிகாட்டியதால் குவிந்த லட்சங்கள்... சாட்சி சொல்லும் கோவை லோகநாதன்!

சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் பிசினஸ் என அத்தனை விஷயங்களையும் எளிமையாகவும், சரியாகவும் தந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நாணயம் விகடன், 21-ம் ஆண்டில... மேலும் பார்க்க

பி.எஃப் பென்ஷன் சிக்கல்கள்... இந்த டிஜிட்டல் யுகத்திலும் முழுமையாக முடிவுக்கு வராத காரணம்?

இ.பி.எஃப்.ஓ அமைப்பு, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்குவதற்காக பிரயாஸ் (PRAYAAS) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டு கடன்கள் அதிகரிப்பு, பணக்கார ஏழைகளாகும் மக்கள், கவலைக்குள்ளாகும் நாட்டின் எதிர்காலம்!

தொழில்துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் இந்த தீபாவளிப் பண்டிகை அமோகமாகக் கடந்திருக்கிறது. காரணம், பண்டிகைக் கால உற்சாகத்தில் இந்திய மக்கள் கணக்குப் பார்க்காமல் செலவு செய்துள்ளனர், பொருள்களை வாங்க... மேலும் பார்க்க