செய்திகள் :

"ஆடுகளம் படத்தில் அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் இருக்கிறது, அதை நான்.!"- இயக்குநர் வெற்றிமாறன்

post image

ம.தொல்காப்பியன் எழுதிய `ஆடுகளம் காட்சிய நுட்பம்' மற்றும் `அதிர்விகளும் காட்சிமையும் EFFECTS & CINEMA LANGUAGE' ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று (டிச.29) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "நிறைய பேர் இந்த நிகழ்ச்சியில் 'ஆடுகளம்' படம் குறித்து பேசியிருந்தார்கள்.

ஆடுகளம்
ஆடுகளம்

நான் `ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரைதான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும்.

ஆனால், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் பார்த்த போது ஒன்று மட்டும் எனக்கு தோன்றியது.

இப்படி ஒரு க்ளைமாக்ஸை எடுக்கும் தைரியம் இன்று நமக்கு வருமா என தெரியவில்லை என்று என் குழுவினரிடம் சொன்னேன்.

மற்றபடி ஆடுகளம் படம் தொல்காப்பியனை ஒரு புத்தகம் எழுத தூண்டி இருக்கிறது, இதனை எழுதியதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அந்த காலகட்டத்தில் 'ஆடுகளம்' படம் அரசியல் ரீதியாக சரியாக இருந்திருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் பார்க்கும்போது அரசியல் ரீதியாக தவறான விஷயங்கள் நிறைய இருக்கிறது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

அதனை விமர்சனத்திற்கு உட்படுத்த நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

குறிப்பாக அப்படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு உண்டு, அது இல்லாமல் இருந்திருக்கலாம் என தோன்றும், ஆனால் அந்த நேரத்தில் அது நன்றாக இருந்தது என வைத்துவிட்டோம்" என்று பேசியிருக்கிறார்.

Cinema Roundup 2025: இந்தாண்டு கவனம் பெற்ற வெப் சீரிஸ்கள் என்னென்ன? | எங்கு பார்க்கலாம்?

2025-ம் ஆண்டு முடிவை எட்டிவிட்டது. இந்த ஆண்டு வெளியாகி பெரிதளவில் பேசப்பட்ட, பலராலும் பின்ச் வாட்ச் செய்யப்பட்ட வெப் சீரிஸ்களை இங்கு பார்ப்போமா...கோலிவுட்:* குற்றம் புரிந்தவன் (Kuttram Purindhavan)இயக... மேலும் பார்க்க

Jana Nayagan: "'ஜனநாயகன்' படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம்" - தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர... மேலும் பார்க்க

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" - பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆக... மேலும் பார்க்க

Parasakthi: "சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது!" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆக... மேலும் பார்க்க

"சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது"- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த... மேலும் பார்க்க