செய்திகள் :

"ஆடுவார், பாடுவார், நடிப்பார்; ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது!" - அமைச்சர் ரகுபதி

post image

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

"எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால், அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம் ஆட்சி முடங்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமியின் வாய் இன்று பலவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறது. அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார். எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது.

ragupathi

கிருஷ்ணராயபுரத்தில் குவாரியல் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள். திருக்குறளை கூறுவார். திருக்குறளை மொழிபெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழிபெயர்ப்பார். என்ன வேண்டுமானாலும் ஆடுவார் பாடுவார் நடிப்பார். ஆனால், மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது. ஐந்து ஓட்டை கூட வாங்க முடியாத சுயேச்சை வேட்பாளர் கூட தான் வெற்றி பெறுவேன் என்றுதான் கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல்தான், த.வெ.க-வின் நிலைமை. தேர்தல் முடிவு வந்த பிறகுதான் தெரியும். வந்த பிறகு பார்க்கலாம். காங்கிரஸ் தி.மு.க கூட்டணி குறித்து பத்திரிகையாளர் தான் சுமுகமான போக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். நாங்கள் குழு அமைத்து விடுவோம். பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பேர் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசலாம். ஆனால், எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை. யாரும் போவதாகவும் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூட்டணிக்கு புதிய கட்சியினர் வருவார்களா என்பதை தலைமை முடிவு செய்யும்" என்றார்.

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க