செய்திகள் :

Leader: "மீம்ஸ்களைப் பார்க்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை!" - லெஜெண்ட் சரவணன்

post image

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘லீடர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டைட்டில் போஸ்டரை வாங்கி சிறப்பித்தார் வணிக சங்கத் தலைவர் விக்ரம ராஜா.

அவர் பேசுகையில், "என்னை அழைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் எல்லையில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒவ்வொரு வணிகரையும் லெஜெண்ட் சரவணன் அழைத்து சிறப்பித்திருக்கிறார்" என்று கூறினார்.

Lyricist Ghibran
Lyricist Ghibran

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், "துணிவு படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கு ஒழுங்காகப் பாட்டு போடுங்கள் என்று மிரட்டுகிறார்கள்" என்றார். இதனைத் தொடர்ந்து நடந்த Q & A அமர்வில் படக்குழுவினரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில் கிடைக்கவில்லை, நீங்கள் இதில் அரசியல் இல்லை என்று வேறு கூறுகிறீர்கள்...


பதில் (சரவணன்): அதனால்தான் எனக்கு கிடைத்திருக்கிறது போல!

கேள்வி: உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன?


பதில் (சரவணன்): நான் பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதில்லை, அதற்கு நேரம் ஒதுக்கவும் விரும்புவதில்லை. இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? அனைத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

'Leader' Movie Team
'Leader' Movie Team

கேள்வி: இயக்குநரே, உங்கள் "கருடன்" படம் பெரிய ஹிட்டாகியது. அதேபோல் இந்தப் படம் தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?


பதில் (இயக்குநர்): இது மிகவும் ஆழமான கேள்வி. அப்படிப்பட்ட படம் இல்லை இது. குடும்பமாக மக்கள் வந்து பார்த்து களிக்க எடுக்கப்பட்ட முழுமையான கமர்ஷியல் படம்தான் இது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமியா, வி.டி.வி. கணேஷ், ஷாம், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

GVM 25: "எனக்கு கிடைச்ச அன்புக்கும், மரியாதைக்கும் 'காக்க காக்க' படமும் ஒரு காரணம்"- நெகிழும் சூர்யா

'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன்.இயக்கம... மேலும் பார்க்க

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'.'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.'7 Screen Studio' லலித் குமார் தயாரித்... மேலும் பார்க்க

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் சின்ன டச்..!" - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவி... மேலும் பார்க்க

With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவி... மேலும் பார்க்க

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே... மேலும் பார்க்க

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக 'கில்லி', '3' போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம்.இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியா... மேலும் பார்க்க