செய்திகள் :

`தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்காததற்கு காரணம் இதுதான்!’ - முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம், கொள்ளார் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பயன்கள் வழங்குதல், என் கனவு என் எதிர்காலம் என்ற இணையத்தளம் துவக்குதல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் விழா இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், ``2021 சட்டமன்றத் தேர்தலின்போது தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம்.

அதேசமயம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றையும் முத்திரை திட்டங்களாக செய்து கொடுத்திருக்கிறோம். தி.மு.க-வைப் பொறுத்தவரை சட்டங்களையும், பெரிய பெரிய திட்டங்களையும் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றுவோம்.

முதல்வர் ஸ்டாலின்

அதற்காகத்தான் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வந்து உங்கள் கோரிக்கைகளைக் கேட்டு, அதை மனுக்களாக வாங்கியிருக்கிறேன்.

அந்தப் பயணத்தில் நான் கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெற்று திராவிட மாடல் அரசை அமைத்தோம். அந்த கோரிக்கைகளை நூறு நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டுமென்று பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கினேன்.

அந்த துறையின் மூலமாக மக்களிடம் இருந்து பெற்ற 4,57,641 மனுக்களுக்கு நூறு நாட்களில் தீர்வு கண்டோம். அந்தத் துறையின் மூலம் மூலம் 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.

இப்படி நாம் ஒருபுறம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொருபுறம் ஒன்றிய பா.ஜ.க அரசும், அதன் கூட்டாளிகளும் அந்த வளர்ச்சியைக் கெடுக்க அனைத்து செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதன் சமீபத்திய உதாரணம்தான் ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட். அதில் பெயரளவுக்குக் கூட தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை. இதற்கு முன்பு ஒப்புக்காகவாவது திருக்குறளை சொன்னார்கள்.

இந்தமுறை அதுவும் இல்லை. பொதுவாக தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவது பா.ஜ.க-வின் தந்திரங்களில் ஒன்று. பீகார், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு அப்படித்தான் நிதி ஒதுக்கினார்கள். அதன்பிறகு அதை செய்தார்களா என்று பார்த்தால், அதையும் செய்திருக்கமாட்டார்கள்.

விழா மேடையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஸ்டாலின்

பா.ஜ.க வழக்கமாக செய்யும் அந்த ஸ்டண்ட்டைக் கூட தமிழ்நாட்டுக்கு செய்யவில்லை. அந்த அளவுக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக இருக்கிறது. 

இந்தியாவின் வளர்ச்சிக்காக நாம் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசுக்கு வரி வருவாயை வாரி வழங்கும் நம் மாநிலத்திற்கு மிக மிக சொற்பமான பங்கைத்தான் திருப்பித் தருகிறார்கள்.

எப்படியும் தேர்தலில் தோற்கத்தானே போகிறோம். அப்புறம் ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்கள் தோற்கத்தான் போகிறார்கள் அதுதான் உண்மை. உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டில் அடுத்து அமையப் போவது திராவிட மாடல் 2.0 அரசுதான்" என்றார்.

TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான்" - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார். அப்போது த.வெ.க தலைவர் குறித்து கேள்வ... மேலும் பார்க்க

"6 நாட்களில் என்ன நடந்தது? ஏன் மோடி விரிவாகப் பேச மறுக்கிறார்?"- வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரகுபதி

இந்தியா - அமெரிக்கா வரி ஒப்பந்தம் குறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், " நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் ப... மேலும் பார்க்க

ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' - விஜய் கண்டனம்

கரூரில் குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம், தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக... மேலும் பார்க்க

`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்கள... மேலும் பார்க்க

துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது. இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த... மேலும் பார்க்க

India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க