செய்திகள் :

TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான்" - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார். அப்போது த.வெ.க தலைவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ``கரூர் சம்பவம் நடந்து 72 நாள்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார். வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்கள். ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள்." என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணி அ.தி.மு.க-வால் உருவாக்கப்பட்டதல்ல. அது பா.ஜ.க-வால் வடிவமைக்கப்பட்டது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், ஒரு தனியார் விடுதியில்தான் நடந்தன. கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரைத்தான் சந்தித்தார்கள். யாரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி அமைக்கவில்லை.

செங்கல்பட்டில் நடந்த பிரதமர் மோடியின் கூட்டமே இதற்குச் சாட்சி. அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க-வே அனைத்தையும் முன்னெடுத்து வருகிறது. இது தெளிவாக பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான்.

ஜெயலலிதாவை திமுக அரசு பல வழிகளில் ஒடுக்கியது. அவர் மீது போடப்பட்ட பல வழக்குகள் பொய்யானவை. அவரது வீட்டில் இருந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் ஜெயலலிதா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் எங்களைப் போன்ற லட்சக்கணக்கான மக்களின் கருத்து.

விஜய்
விஜய்

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை 'தவழ்ந்து போய் காலில் விழுந்தவர். இரட்டைக் கொலை செய்தவர்' என கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, இன்று அதே நபரை 'முதல்வர் வேட்பாளர்' என முன்னிறுத்துவது கேவலமான அரசியல். இப்படி தினமும் ஒரு பேச்சு பேசும் நபர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.

தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதையே வேலையாகக் கொண்டுள்ளன. கடந்த முறை தி.மு.க அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. தற்போது அ.தி.மு.க அள்ளி வீசும் வாக்குறுதிகளையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஆனால், எங்கள் தலைவர் விஜய் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னையையும் ஆய்வு செய்து வருகிறார். அவர் அறிவிக்கப்போகும் வாக்குறுதிகள் நூறு சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எங்களது தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான காவல்துறையின் அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தலைவர் விஜய் இதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டு வருகிறார்." என்றார்.

"ஆடுவார், பாடுவார், நடிப்பார்; ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால், அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவ... மேலும் பார்க்க

"6 நாட்களில் என்ன நடந்தது? ஏன் மோடி விரிவாகப் பேச மறுக்கிறார்?"- வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரகுபதி

இந்தியா - அமெரிக்கா வரி ஒப்பந்தம் குறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், " நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் ப... மேலும் பார்க்க

ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' - விஜய் கண்டனம்

கரூரில் குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம், தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக... மேலும் பார்க்க

`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்கள... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்காததற்கு காரணம் இதுதான்!’ - முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கம்

விழுப்புரம் மாவட்டம், கொள்ளார் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பயன்கள் வழங்குதல், என் கனவு என் எதிர்காலம் என்ற இணையத்தளம் துவக்குதல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் விழா இன்று நடை... மேலும் பார்க்க

துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது. இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த... மேலும் பார்க்க