செய்திகள் :

'ஆடைகளைக் கிழித்து, போலீஸாரை அழைப்பேன்' - வீட்டில் புகுந்து திருடி சிக்கிக்கொண்ட பெண் மிரட்டல்

post image

ஜெய்ப்பூரில் உள்ள மொஹானா பகுதியில் ஒரு வீட்டின் படுக்கையறைக்குள் புகுந்து நகைகளைத் திருடிய பெண் ஒருவர், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சிக்கினார். வீட்டின் உரிமையாளர் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டியதால் மாட்டிக்கொண்ட அந்தப் பெண், தப்பிக்க வழி தெரியாமல் தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டு போலீஸாரை அழைப்பதாக மிரட்டி தன் மீது கை வைத்தால் பொய் வழக்கு போடுவேன் என்றும் அவர் உரிமையாளரை அச்சுறுத்தினார்.

ஜெய்ப்பூர் முஹானா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு (சுமார் ஒரு வருடத்திற்கு முன்) ₹7 லட்சம் மதிப்புள்ள நகைகளும் பணமும் திருடு போயிருந்தன. இந்த முந்தைய திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்தே, வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் பாதுகாப்பிற்காக படுக்கையறையில் ரகசிய சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார்.

வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தபோது, தனது மொபைல் போன் மூலம் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தார். அப்போது ஒரு பெண் படுக்கையறைக்குள் நுழைந்து, பீரோவைத் திறப்பதைக் காட்டியது. அவர் அங்கிருந்த ஒரு சிறிய பெட்டியை வெளியில் எடுத்து, அதை படுக்கையின் மேல் வைத்து, அதில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாகத் தேடிப் பார்த்தார். அதில் பெரும்பாலானவை தங்க நகைகளாக இருந்தன.

உடனே வீட்டின் உரிமையாளர் தனது பக்கத்து வீட்டுக்காரரைத் தொடர்புகொண்டு விபரத்தைக் கூறி, வீட்டின் முக்கிய நுழைவாயில் கதவைப் பூட்டுமாறு கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், அவரும் அவசரமாக வீட்டிற்கு நோக்கி விரைந்தார். வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட அந்தப் பெண், வீட்டின் உரிமையாளரிடமும் , அவரது பக்கத்து வீட்டுக்காரரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்தப் பெண், "நான் என் ஆடைகளைக் கிழித்துக் கொள்வேன். போலீஸ் உங்களைப் பிடிக்கும்" என்று மிரட்டினார். அதனை வீட்டு உரிமையாளர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். அதோடு இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார்.

போலீஸாரின் உடனடி நடவடிக்கை

தகவல் கிடைத்தவுடன் முஹானா பகுதி போலீஸார் விரைந்து வந்து சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்தப் பெண் பாதுகாப்பாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"என் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு போலீஸாரை அழைப்பேன்" என்ற அந்தப் பெண்ணின் வார்த்தைகள், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி தப்பிப்பதற்காகச் செய்யப்பட்ட திட்டமிட்ட மிரட்டலாகும். ஆனால், உரிமையாளரும் பக்கத்து வீட்டுக்காரரும் அவரிடமிருந்து தள்ளி நின்று வீடியோ பதிவு செய்ததால், வீட்டு உரிமையாளர் பொய் வழக்குகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டார்.

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க

`தீர்ப்பு சாதகமா வரணும்' - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு' தூவி பில்லிசூனியம் வைத்த பெண்

சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்... மேலும் பார்க்க

'வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி' - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!

வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது. பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இர... மேலும் பார்க்க

`மட்டன் போடுவதாக சொல்லிவிட்டு சிக்கன் போட்டுவிட்டார்கள்'- பீகார் திருமணத்தில் வன்முறை; 12 பேர் காயம்

திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டு... மேலும் பார்க்க